அதிமுகவில் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் எந்த நிர்வாகியும் தேர்வு செய்யப்பட்டது கிடையாது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கும்போது பொதுக்குழுதான் தீர்மானம் போட்டது. இடைக்கால ஏற்பாடாகதான் இரட்டைத் தலைமை கொண்டு வரப்பட்டது.
5 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் கூறப்படவில்லை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவும், வழக்கறிஞருமான இன்பதுரை கூறியுள்ளார்.
அதிமுக - ஒற்றை தலைமை
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. வரும் 23ம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட உள்ள நிலையில் கடந்த 4 நாட்களாக அதிமுக நிர்வாகிகள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் மாறி மாறி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் பொதுச்செயலாளரை நியமிப்பது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என கூறியிருந்தார். அப்படி இருந்த போதிலும் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையை அமைப்பதில் பிடிவாதமாக உள்ளார். இதனால், பொதுக்குழுவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரிய அளவில் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![]()
நீதிமன்றம் சென்றாலும் வேலைக்கு ஆகாது
இந்நிலையில், ஒற்றை தலைமை பொதுக்குழுவில் உருவாக்க முடியுமா? முடியாதா என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இன்பதுரை;- கட்சியினுடைய விதிகளை சுட்டிக்காட்டி ஒற்றைத் தலைமையை உருவாக்கும் உரிமை பொதுக்குழுவுக்கு உள்ளதாக உறுதியாக தெரிவித்தார். அதிமுகவில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு பொதுக் குழுதான். பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் அது செல்லாது. ஒற்றைத் தலைமையை ஏற்படுத்தும் உரிமை பொதுக்குழுவுக்கு உண்டு. அதில் சட்ட ரீதியாக எந்த சிக்கலும் இல்லை. தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளை மாற்றும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு உண்டு. தீர்மானம் நிறைவேற்றலாம்.

அதிமுகவில் 5 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் எந்த நிர்வாகியும் தேர்வு செய்யப்பட்டது கிடையாது. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கும்போது பொதுக்குழுதான் தீர்மானம் போட்டது. இடைக்கால ஏற்பாடாகதான் இரட்டைத் தலைமை கொண்டு வரப்பட்டது. இப்போது அந்த நிலைமை மாற வேண்டும் என்று தொண்டர்கள் சொல்லும்போது அதற்கு விதிமுறைகள் இருக்கிறது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையத்தில் போய் இதுகுறித்து முறையிட்டாலும், அவர்கள் இதில் நடவடிக்கை எடுக்க முடியாது. யார் வேண்டுமானாலும் பதவிக்கு வரலாம், அதற்கான சட்ட விதிகளில் என்ன இருக்கிறது என்பதை காட்டச் சொல்வார்கள். அப்படி ஓற்றைத் தலைமைக்கான விதிகள் கட்சியில் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் நீதிமன்றத்திற்கு செல்வோம், பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுப்போம் என்று சொல்லலாம். அதெல்லாம் எதுவும் நடக்காது. விதிகள் தெளிவாக இருக்கிறது என்று இன்பதுரை தெரிவித்தார்.
இதையும் படிங்க;- OPS ஒப்புதல் இல்லாத தீர்மானம் செல்லாது.. மீறினால் அதிமுக அழிவை நோக்கி செல்லும்.. வைத்தியலிங்கம்..!
