திட்டமிட்டபடி பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் நடைபெறும். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்படுவர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்து போட்டு தான் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியும். அப்படி இருவரின் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் ஒற்றைத் தலைமை குறித்தத தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது என வைத்தியலிங்கம் கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களுடன் 4-வது நாளாக இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, பசுமை வழிச்சாலையில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதை குறித்து விவாதிக்கப்பட்டது. சுமுகமான நிலைக்கு கட்சியை கொண்டு வருவது எப்படி என்பது குறித்து தம்பிதுரை பேசினார். ஓபிஎஸ் கூறிய கருத்துகளை இபிஎஸிடம் எடுத்துச் சொல்வதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் நடைபெறும். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்படுவர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து கையெழுத்து போட்டு தான் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியும். அப்படி இருவரின் ஒப்புதல் இல்லாமல் ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அது செல்லாது.

கழகத்தின் அடிப்படை உறுப்பினர் மூலம் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதை பொதுக்குழுவில் வைத்து ரத்து செய்ய முடியாது. தலைமை இறந்து போனால் தான் தற்காலிகமாக பொதுக்குழுவில் கொண்டு வரமுடியும். அவற்றையெல்லாம் மீறி ஒற்றை தலைமை பற்றி தீர்மானம் கொண்டு வந்தால் அதிமுக அழிவை நோக்கி செல்லும் என வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.