* ஆந்திர முதல்வர் நாயுடுவிடம் பாலாறு பிரச்சனை பற்றி ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை? என்று வரலாறு தெரியாமல் முதல்வர் எடப்பாடி பேசுவதாக துரைமுருகன் சாடல். (விடுங்கண்ணே! சேக்கிழார் ராமாயணம் படிக்கிறப்ப, வரலாறை மறந்திருக்கலாம். இது ஒரு குத்தமாய்யா?)

* சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு, கொடுக்க கூடாத மருந்தை கொடுத்து ‘ஸ்லோ பாய்சன்’ மூலம் கொலை செய்தது ஒரு கும்பல்! என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தாக்கியுள்ளார். (எதுக்கும் மாத்திர கொடுக்குறதுக்கு மின்னாடி, நம்ம திண்டுக்கல் டாக்டரோட சென்னை விஜயத்தை தெரிஞ்சுகிட்டு  அவராண்ட கன்ஜல்ட் பண்ணிருக்கலாம்)

* நான் பா.ஜ.க.வை எதிர்க்கவில்லை. மாநில அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய நிதியை தரவில்லை. அதனால் எங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினேன். அவ்வளவே! என்று சொல்லியுள்ளார் தம்பிதுரை. (ஆமாங்க, தலைவர் பா.ஜ.க.வை எதிர்க்கலை. ஜஸ்ட் மோடிய  அவரு திட்டுன மாதிரியும், அவங்க கூட கூட்டணி கிடையாதுன்னும் கனா கண்டிருக்கார். அதப்போயி இப்படி பரப்பி .... என்ன சின்னப்புள்ள தனமான அரசியலா இருக்குது!)

* பொது நலன் கருதி, நடிகர்கள் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தி, அதை நடிகர் சங்கத்தின் அடிப்படை விதியாக்குவதற்கான வாய்ப்புகளை நாசர் உருவாக்க வேண்டும்! என நாசருக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். (தலீவரே! நீங்க எழுதுனீங்க ஓ.கே. அதே மாதிரி அவிய்ங்களும், ‘பா.ம.க. இனி தேர்தலுக்கு ஒரு கூட்டணின்னு தாவ கூடாது! தனித்தே போட்டியிடணும்! முன்னாடியே நீங்க சொன்னதை நீங்களே மீறி வாரிசு அரசியல் பண்ணிட்டு இருக்கிறதாலே அந்த சவுக்கடியை எப்போ, எங்கே, எந்த நடுரோட்டுல நின்னு அடிச்சுக்கப்போறீங்க, சீக்கிரம் அடிங்க டாக்டர்.’ அப்படின்னு பதில் கடிதம் எழுதுனா என்னவாகும்?) 

* திருநாவுக்கரசர் ஒரு பொம்மை தலைவர்! என்று தமிழக காங்கிரஸின் மாஜி தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். ( தல, பொம்மைன்னு பொத்தாம் பொதுவா சொன்னா  எப்படி? ரப்பரா, மரமா, கல்லா, கண்ணாடியான்னு தொட்டுப்பார்த்து கண்டுபிடிக்கிறேன்னு!ன்னு சத்தியமூர்த்தி பவனுக்கு எவனாச்சும் சட்டைய மாட்டிட்டு கெளம்பிட போறான். அப்புறம் வில்லங்கத்துல சிக்கப்போறது நீங்கதான்.)