இரயில்களின் திருத்தப்பட்ட அட்டவணை மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்களை இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ வலைதளம், மற்றும் செல்போன் செயலியில் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதற்காக இணையதளம் மற்றும் செயலிகளையும் வெளியிட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக நீண்ட தூர சிறப்பு ரயில்களின் அட்டவணையை இந்தியரயில்வே திருத்தியுள்ளது. 

இதுபோன்ற மாற்றங்களை செய்தி வெளியீடு மூலமாகவும், மொபைல் எஸ்எம்எஸ் சேவைகளின் மூலமாகவும் ஐஆர்சிடிசி மூலம் தெரிவிக்க ரயில்வே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணத்தைத் தொடங்குவதற்கு முன் இரயில் சேவைகளின் நேரங்களில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும், அட்டவணை, நிறுத்தங்கள், இரயில் இயங்கும் நிலை மற்றும் பிற விவரங்கள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை பின்வரும் அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் / இந்திய ரயில்வேயின் மொபைல் செயலி ஆகியவற்றின் மூலம் சரிபார்த்து கொள்ளலாம். 

1. தேசிய ரயில் விசாரணை முறை (NTES) :  https://enquiry.indianrail.gov.in/ntes/index.html

(ரயில்களின் நேரங்களை “ரயில் அட்டவணை” பொத்தானைப் பயன்படுத்தி காணலாம்)

2. இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வலைதளம் (IRCTC) : https://www.irctc.co.in/nget/train-search

3. இந்தியத் தொடர்வண்டி உணவுவழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ரயில் இணைப்பு செல்போன் செயலி (IRCTC Mobile App) :
https://play.google.com/store/apps/details?id=cris.org.in.prs.ima (Android பயனர்களுக்கு)

https://apps.apple.com/in/app/irctc-rail-connect/id1386197253 (IOS பயனர்களுக்கு) ஆகியவற்றின் மூலம் இரயில் பயணிகள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.