Asianet News TamilAsianet News Tamil

திராவிட மாடல் என்றால் என்ன தெரியுமா.? இந்திய மாடலின் ஓர் அங்கம்.. முதல்வர் முன்னிலையில் பேசிய வானதி சீனிவாசன்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துக்கேற்ப தமிழக அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பாஜக தங்களுடைய ஒத்துழைப்பைத் தருகிறது. 

Do you know what the Dravidian model is? An element of the Indian model .. Vanathi Srinivasan speaking in the presence of the Chief Minister!
Author
Chennai, First Published May 7, 2022, 10:12 PM IST

திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம் என்று சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட திமுகவினர், திராவிட மாடல் என்ற சொல்லாடலை பயன்படுத்தி வருகிறார்கள். அனைவருக்கும் வளர்ச்சி என்பதே திராவிட மாடல் என்றும் முதல்வர் ஸ்டாலின் அதற்கு விளக்கமும் அளித்து வருகிறார். ஆனால், திமுகவினர் திராவிட மாடல் என்று பேசுவதை வைத்து ஆட்சியில் குறைபாடுகள் ஏற்படும்போதெல்லாம் ‘இதுதான் திராவிட மாடல் ஆட்சி’ என்று பாஜகவினர் விமர்சிக்கவும் கிண்டலடிக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பேசியதற்கு நன்றி தெரிவித்து கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசினார்.

Do you know what the Dravidian model is? An element of the Indian model .. Vanathi Srinivasan speaking in the presence of the Chief Minister!

அப்போது அவர் பேசுகையில், “திமுக அரசு ஓராண்டு நிறைவு செய்ததை பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் இந்தியாவின் வளர்ச்சியாகப் பார்க்க வேண்டும் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவருடைய கருத்துக்கேற்ப தமிழக அரசின் ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு பாஜக தங்களுடைய ஒத்துழைப்பைத் தருகிறது. அதை வேகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பாஜக எடுக்கும். திராவிட மாடல் என்ற வார்த்தையை முதலமைச்சர் பயன்படுத்துகிறார். திராவிட மாடல் என்றால் அது தமிழ்நாடு உட்பட ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உள்ளடக்கியதுதான். திராவிட மாடல் என்பது இந்திய மாடலின் ஓர் அங்கம்தான்” என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios