Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு நாளும் செலுத்தும் வட்டி எவ்வளவு தெரியுமா..? ரூ. 87.31 கோடி..!

தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது. அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது நிதிப் பற்றாக்குறை 4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது.

Do you know how much interest the Tamil Nadu government pays every day ..? Rs. 87.31 crore
Author
Tamil Nadu, First Published Aug 9, 2021, 12:36 PM IST

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2 லட்சத்தி 63 ஆயிரம் கடன் உள்ளது வெள்ளை அறிக்கை வெளியிட்டு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி அளித்தார்.

Do you know how much interest the Tamil Nadu government pays every day ..? Rs. 87.31 crore

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.திமுக ஆட்சியில் ஒட்டுமொத்த உற்பத்தியில் 11.41 சதவீதமாக இருந்த வருவாய், அதிமுக ஆட்சியில் 3.8 சதவீதமாக சரிவு.கடந்த ஆட்சியில் அதிகளவு கடனை சார்ந்து இருந்ததாலேயே தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவுக்கு கூட வரி வருவாய் இல்லை.

 Do you know how much interest the Tamil Nadu government pays every day ..? Rs. 87.31 crore

கடைசி 5 ஆண்டில் பொதுக்கடன் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய். வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து வரியை பெறாமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். ஜீரோ வரி என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு பயன் தரும்- ஏழைகளுக்கு எதிரானது. உள்ளாட்சித் தேர்தலை சரியான தருணத்தில் நடத்தாததால் ரூ.2,577 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; மாநிலத்தில் வளர்ச்சி 11.46% லிருந்து 4.4% ஆக சரிந்துவிட்டது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை.Do you know how much interest the Tamil Nadu government pays every day ..? Rs. 87.31 crore

தமிழ்நாடு அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது. அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின் போது நிதிப் பற்றாக்குறை 4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது. அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90% மின்வாரியத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios