Asianet News TamilAsianet News Tamil

பழைய வாகனங்கள் வைத்திருக்கிறீர்களா..? உங்களுக்குத்தான் இந்த ஷாக் நியூஸ்..!

பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த கட்டண அளவு அதிரடியாக பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை மறுபதிவு செய்வதற்கான தொகை 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 
Do you have old vehicles ..? This shocking news is for you ..!
Author
Tamil Nadu, First Published Oct 6, 2021, 6:11 PM IST

பழைய வாகனங்களை மறுபதிவு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த கட்டண அளவு அதிரடியாக பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை மறுபதிவு செய்வதற்கான தொகை 8 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில், ’’15 ஆண்டுகள் பழமையான கார்களை மறுபதிவு செய்ய தற்போது ரூ.600 ஆக உள்ள கட்டணம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8 மடங்கு அதிகம் ஆகும். பழைய மோட்டார்சைக்கிள்களுக்கு ரூ.300 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் இனி ரூ.1000 ஆக உயர்த்தப்படுகிறது.

Do you have old vehicles ..? This shocking news is for you ..!

பழைய பஸ்கள் மற்றும் லாரிகளுக்கு ரூ.1500 ஆக இருந்த மறுபதிவு கட்டணம் ரூ.12 ஆயிரத்து 500 ஆகவும், சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இறக்குமதி செய்யப்பட்ட கார் மற்றும் மோட்டார்சைக்கிள்களுக்கு கட்டணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பழைய வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் காலாவதியாகி இருந்தால் அன்றைய தினத்தில் இருந்து தினமும் ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படும்.Do you have old vehicles ..? This shocking news is for you ..!

இவை தனியார் வாகனங்களாக இருந்தால் மாதத்துக்கு ரூ.300-ம், வர்த்தக வாகனங்களாக இருந்தால் ரூ.500-ம் அபராதமாக வசூலிக்கப்படும். இவை அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்குவரும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
Follow Us:
Download App:
  • android
  • ios