Asianet News TamilAsianet News Tamil

எம்.ஜி.ஆர். உருவாக்கிய விதிகளில் கை வைக்க நீங்க யாரு.? ஓபிஎஸ்-இபிஎஸ்ஸை துரத்தியடிக்கணும்.. பொங்கிய புகழேந்தி.!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ. பன்னீர்செல்வம் ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கிறார். இதனால், அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஆட்சிமன்றக் குழுவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. உண்மையில் உசசிகலா அதிமுகவில் இருந்திருந்தால் உட்கட்சித் தேர்தல் பிரச்சினையே இருந்திருக்காது.

Do you change rules who it is created by mgr? OpS-EPS will be chased away .. Pugalendi angry.!
Author
Chennai, First Published Dec 8, 2021, 8:06 AM IST

தலைவரின் பை லாவை திருத்துவதற்கு முதலில் இவர்கள் யார்? அதிமுக கட்சியிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸை துரத்தியடிக்க வேண்டும் என்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கட்சித் தொண்டர்கள் மூலம் நிரப்பப்படும் என்று அறிவித்து, அதன்படி தேர்தலையும் நடத்தி முடித்துவிட்டார்கள். ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் போட்டியின்றி அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில், இத்தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ளார். “அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் சரியாக நடத்தப்படவில்லை. என்ன நடந்தாலும் சரி, நான் விட மாட்டேம்.  இந்த விஷயத்தில் நியாயம் கிடைக்கும் வரை விடப்போவதில்லை. இந்த விஷயத்தில் என்னுடைய பங்கு நிச்சயமாக இருக்கும். நல்ல தீர்ப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.Do you change rules who it is created by mgr? OpS-EPS will be chased away .. Pugalendi angry.!

ஜெயக்குமார் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த ஒரு மனிதர். தமிழ் நாட்டில் லேட்டஸ்ட் பபூன் யார் என்றால் அது ஜெயக்குமார்தான். அதிமுகவின் பை லாவை திருத்த வேண்டிய அவசியமே எழவில்லை. பை லாவை உருவாக்கியது எம்.ஜி.ஆர். தலைவரின் பை லாவை திருத்துவதற்கு முதலில் இவர்கள் யார்? அதிமுக கட்சியிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸை துரத்தியடிக்க வேண்டும். அதிமுக தலைமை பொறுப்புக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால். அவர்களை கட்சித் தொண்டர்களால் முறையாகத் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தர்மயுத்தம் அடிப்படையில்தான் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற்றது என்று ஓபிஎஸ் சொல்கிறார். இவர்தானே அன்று எடப்பாடி பழனிசாமி அரசு ஓர் ஊழல் அரசு, அம்மாவின் சாவில் மர்மம் எனச் சமாதியில் மவுனயுத்தம் செய்தவர். இதையெல்லாம் யாரும் மறக்கவில்லை. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு ஓ. பன்னீர்செல்வம் ஜால்ரா அடித்துக்கொண்டிருக்கிறார். இதனால், அம்மாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஆட்சிமன்றக் குழுவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. உண்மையில் உசசிகலா அதிமுகவில் இருந்திருந்தால் உட்கட்சித் தேர்தல் பிரச்சினையே இருந்திருக்காது.Do you change rules who it is created by mgr? OpS-EPS will be chased away .. Pugalendi angry.!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்திற்கு வாரிசுதாரராக உயர் நீதிமன்றத்தால் குறிப்பிட்டுள்ள தீபா, தீபக் ஆகியோர் இதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பதுதான் கட்சித் தொண்டர்களின் விருப்பம்.” என்று புகழேந்தி தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios