Asianet News TamilAsianet News Tamil

தவறாமல் இதை செய்யுங்க.. இல்லன்னா ஆக்ஷன் கடுமையா இருக்கும்.. காக்கிகளை அலறவிட்ட டிஜிபி சைலேந்திரபாபு.

போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மூலம் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. 

Do this without fail .. otherwise the action will be tough .. DGP Silenthrababu who shouted police officials.
Author
Chennai, First Published Oct 23, 2021, 9:48 AM IST

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் போக்சோ வழக்குகளை கையாள்வது தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி மாநில காவல் துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Do this without fail .. otherwise the action will be tough .. DGP Silenthrababu who shouted police officials.

இதையும் படியுங்கள்: பாமக மாவட்ட செயலாளர் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை.. திருநள்ளாறில் 144 நடை உத்தரவு.

பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே சமயத்தில், மறுபுறம் சிறார்களுக்கு எதிரான வன்முறையும் பாலியல் அத்துமீறல்களும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, இந்த வரிசையில் போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மூலம் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் போக்சா வழக்குகளை விசாரணை அதிகாரிகள் எவ்வாறு கையாள வேண்டும் என தமிழக காவல்துறை டிஜிபி காவல் அதிகாரிகளுக்கு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Do this without fail .. otherwise the action will be tough .. DGP Silenthrababu who shouted police officials.

இதையும் படியுங்கள்: காயத்ரி ரகுராம் சறுக்கி விழுந்தபோது விலகிய புடவை.. ஆபாசமாக பதிவிட்ட திமுக பிரமுகர்.. காவல் ஆணையரிடம் புகார்.

அதில், போக்சோ சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தகவல் அறிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விற்கு உடனே எனக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல் விசாரணை அதிகாரிகள் 164 கிரிமினல் சட்டத்தின்படி தேவைப்பட்டால் மட்டுமே பாதிக்கப்பட்ட சிறார்களின் வாக்குமூலத்தை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும், அவ்வாறு பதிவு செய்யும் பட்சத்தில் காவல் துறையை சார்ந்த புகைப்பட கலைஞர்களை மட்டுமே அதற்கு பயன்படுத்த வேண்டும். 

 Do this without fail .. otherwise the action will be tough .. DGP Silenthrababu who shouted police officials.

அதேபோல் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், சிறப்பு நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு பெறலாம் என்ற விபரத்தையும் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட இந்த அறிவிப்புகளை பின்பற்றாத விசாரணை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios