ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பட வெளியீட்டுக்கான இறுதிகட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. டீசர் ரிலீஸ் மற்றும் ஆடியோ வெளியீட்டுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 'காலா' படத்தின் டீசர் வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி வெளியாவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் சற்று நேரத்திற்கு முன்பாக தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

கபாளிபடத்தை அடுத்த பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'காலா'. சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக தனுஷ் தயாரிக்கிறார். 'காலா' வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து விட்டபோதும், '2.O' படத்திற்காக காலா படத்தின் ரிலீஸை தள்ளி வைத்தனர். அதனால் காலா டீசர் வெளியீட்டையும் தள்ளி வைத்திருந்தனர். தற்போது '2.O' தள்ளிப் போனதால், அந்தப் படம் வெளியாகயிருந்த ஏப்ரல் 27--ம் தேதி 'காலா' திரைக்கு வருகிறது.

இந்நிலையில், 'காலா' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என தனுஷ் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. "இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்லல..? பாப்பீங்க!" எனும் வசனம் இந்த டீசரில் இடம்பெற இருக்கிறதாம். 

அதேபோல, “ஆரம்பத்துல அப்பாவியா நடிக்க நான் மாணிக்கமும் இல்ல, குமுதவள்ளிய தேடிப்போற கபாலியும் இல்லடா... பத்துபேரு நிக்கிற சண்டையில ரண்டு பேரு கால ஒடச்சி, மூனுபேரு கையை உடைச்சி, மிச்சம் இருக்குற அஞ்சி பேர ஏன் கால பிடிச்சி கண்ணீர் விட்டு கதற வைக்கிறானே அந்த காலாடா கால கரிகாலன்” என நீளமான வசனமும் அடுத்து வரும் டிரெய்லரில் இடம்பெறுமாம்.

தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் பிரமாண்டமாக வெளியிடும் இந்தப் படத்தில், ரஜினியுடன் நானா படேகர், சமுத்திரக்கனி, 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.