Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதிக்கு மெரினாவில் இடமில்லை; கொந்தளிக்கும் தொண்டர்களால் பதற்றம்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

DMK workers protest outside Kauvery hospital after Tamil Nadu Govt denied land for Karunanidhi memorial at Marina beach

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்காத தமிழக அரசுக்கு மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சியினரும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 
மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் கூறி காவேரி மருத்துவமனை முன் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகளை தொண்டர்கள் அடித்து உதைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திமுக நீதிமன்றத்தை நாடா உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.DMK workers protest outside Kauvery hospital after Tamil Nadu Govt denied land for Karunanidhi memorial at Marina beach

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியின் விருப்பங்களின் மிக முக்கியமானது தனது மறைவிற்கு பிறகு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே தம்மை அடக்க செய்ய வேண்டும் என்பதாகும். அதன் அடிப்படையில் தான் கருணாநிதி நலம் விசாரிக்க வந்த எடப்பாடி பழனிச்சாமியிடம் உருக்கத்தோடு கனிமொழி வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் கருணாநிதி உடல் நிலை மதியம் மோசமான நிலையில் மு.க.ஸ்டாலின் கனிமொழி, அழகிரி, மு.க.செல்வம், ஐ. பெரியசாமி, துரைமுருகன் ஆகியோர் சென்று எடப்பாடியிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்தனர்.

 DMK workers protest outside Kauvery hospital after Tamil Nadu Govt denied land for Karunanidhi memorial at Marina beach

ஆனால் அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் இடம் அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் நினைவகத்தில் இடம் ஒதுக்க தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மெரினாவில் நல்லடக்கம் செய்யாத தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. தமிழகம் முழுக்க திமுகவினர் மட்டுமில்லாமல் பொதுமக்களும் கொந்தளித்து போய் உள்ளனர். காவேரி மருத்துவமனையின் வெளியே சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios