நாமக்கல்லில், ஆளுநர் ஆய்வு நடத்தியது பற்றி விளக்கம் வெளியான நிலையில், இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் திமுக ஒருபோதும் பயப்படாது என்று
அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாமக்கல் சென்று ஆய்வு நடத்தினார். அங்கு சென்ற அவருக்கு திமுகவினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆளுநருக்கு எதிராக திமுகவினர் கருப்பு கொடி காட்டப்பட்டதற்காக திமுகவினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இது குறித்து ஆளும் தரப்பில்,
சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டதால்தான் திமுகவினர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கருப்பு கொடி காட்டாமல், வேறு ஒரு இடத்தில் கருப்பு கொடி காட்டப்பட்டதால்தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மதிமுகவினர் கைது செய்யப்பட்டது குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டது குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில்,
மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆய்வு செய்ய ஆளுநருக்கு உரிமை இல்லது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஆளுநருக்கு உள்ளது என்றும், மக்களின் நலனுக்காக இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் என்றும் அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை சார்பில் அளித்துள்ள விளக்கம் குறித்து, திமுக முதன்மை செயலாளர், ஆளுநரின் பூச்சாண்டிக்கெல்லாம் திமுக பயப்படாது என்று கருத்து
கூறியுள்ளார். ஆளுநர் பூச்சாண்டிக்கு திமுக ஒருபோதும் பயப்படாது என்றும், ஆளுநர் செல்லும் இடங்களில் கருப்பு கொடி காட்டப்டும் என்றும் துரைமுருகன்
கூறியுள்ளார்.