DMK walkout from legislative assembly

ஆர்.பி உதயக்குமார் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் சட்டப்பேரவையில் பேசுகிறார் என கூறி திமுகவினர் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவையில் மாநில கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரச்சனையை திமுக எழுப்பும்போது சபாநாயகரால் அடக்கப்படுவார்கள். இதை எதிர்த்து திமுக வெளிநடப்பு செய்வது வழக்கம்.

அதன்படி இன்று வருவாய்த்துறை குறித்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

இதில் வருவாய்த்துறை அமைச்சர் எழுந்து பேச ஆரம்பித்தார். அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு செய்தது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், தமிழக சட்டசபை அதிமுக பொதுக்கூட்டம் போல் செயல்படுவதாகவும் தாங்கள் சட்டசபைக்கு தான் வந்தோம் எனவும், பொதுக்கூட்டத்திற்கு அல்ல எனவும் தெரிவித்தார்.

வருவாய்துறை அமைச்சர் உதயக்குமார் கடந்த 30 நிமிட்த்திற்கு மேலாக அதிமுகவை புகழாரம் பாடி கொண்டு இருப்பதாகவும் இதையெல்லாம் பொதுக்கூட்டத்தில் செய்யாமல் சட்டசபையில் செய்து கொண்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.