காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும், ரஜினியின் அரசியல் ஆலோசகருமான தமிழருவி மணியன் ‘’என் மூச்சு முடிவதற்குள் தமிழகத்தில் இருந்து திராவிடக்கட்சிகள் அகற்றப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்’’எனத் தெரிவித்து இருந்தார். இதற்கு திமுக தனது அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பதிலடி கொடுத்துள்ளது. 

ஆண்டி- போண்டி என்கிற பகடி பக்கத்தில் வெளியாகி உள்ள அந்தப்பகுதியில், ஆண்டி:-  ஏன்ய்யா; ‘’என் மூச்சு முடிவதற்குள் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே என் எண்ணம்’’ என்று தமிழ் இழிவு மணியன் கக்கி இருக்கிறது பார்த்தாயா?  

போண்டி:- ஆமாய்யா; எனக்கு சொந்தமாய் வீடுகூட இல்லை என்று கலைஞரை பார்த்து கண்ணீர் விட்டு அரசு வீடு வாங்கிச் சென்றவராச்சே..! நான்கு ஆண்டுக்கு ஒருமுறை எனக்குச் சொந்தமாய் வீடுகூட இல்லை என்று கலைஞரைப் பார்த்து கண்ணீர் விட்டு அரசு வீடு  வாங்கிச் சென்றவராச்சே..!

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாக்கை வேறுவேறு ஆட்களுக்கு வாடகைக்கு விட்டுப்பிழைக்கும் நாக்கு வியாபாரிக்கு இப்போது புது போக்கிடம் கிடைத்துள்ளது. திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைத்து மூச்சை விட்டவர் உண்டு. ஆரிய அடிவருடிகளின் மூச்சை அடைப்பதே திராவிடம்’என விமர்சித்துள்ளது.