Asianet News TamilAsianet News Tamil

திமுக பேராசிரியர் அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த முக.அழகிரி வாராதது ஏன்? ஆவேசப்படும் "அ" அணியினர்!!

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலம் இல்லாமல் இருந்த நேரத்தில் கூட திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரி ஒரு முறை கூட அன்பழகனை மருத்துவமனைக்கு போய் பார்த்தது இல்லை.பேரறிஞர்அண்ணா காலத்தில் இருந்து திமுகவை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவர் தான் அன்பழகன். இவர் கட்சிக்கு மட்டும் பொதுச்செயலாளர் அல்ல. கருணாநிதிக்கு கட்சி ரீதியாகவோ, குடும்ப ரீதியாக ஏதாவது சிக்கல்கள், மனவருத்தங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படும் போதெல்லாம் அதை முன்னின்று முடித்து வைக்கும் குடும்ப மூத்தவர் அன்பழகன்.

DMK to pay tribute to Professor Anabhagan's body. Supported "A" teammates !!
Author
Tamil Nadu, First Published Mar 9, 2020, 7:50 AM IST

T.Balamurukan
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உடல்நலம் இல்லாமல் இருந்த நேரத்தில் கூட திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க அழகிரி ஒரு முறை கூட அன்பழகனை மருத்துவமனைக்கு போய் பார்த்தது இல்லை.பேரறிஞர்அண்ணா காலத்தில் இருந்து திமுகவை வளர்த்தெடுத்தவர்களில் ஒருவர் தான் அன்பழகன். இவர் கட்சிக்கு மட்டும் பொதுச்செயலாளர் அல்ல. கருணாநிதிக்கு கட்சி ரீதியாகவோ, குடும்ப ரீதியாக ஏதாவது சிக்கல்கள், மனவருத்தங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படும் போதெல்லாம் அதை முன்னின்று முடித்து வைக்கும் குடும்ப மூத்தவர் அன்பழகன்.

DMK to pay tribute to Professor Anabhagan's body. Supported "A" teammates !!

கருணாநிதியின் குடும்பத்தினர் அழகிரி ,ஸ்டாலின், கனிமொழி, தமிழரசன், முத்து போன்றவர்கள் எல்லாம் பேராசிரியரை "பெரியப்பா" என்று தான் அழைப்பார்கள்.கருணாநிதிக்கு எப்படியோ, அதே மரியாதை இவருக்கும் அந்த குடும்பத்தில் உண்டு. பேரறிஞர் அண்ணாவுக்கு தம்பியாக, கருணாநிதிக்கு அண்ணனாக இவர் பிள்ளைகளுக்கு பெரியப்பாவாக இருந்து தன் கடமைகளை செவ்வனே செய்தவர் தான் அன்பழகன். கட்சி தலைவருக்கு பொதுச்செயலாளராகவும், கருணாநிதிக்கு அண்ணனாகவும்..., திமுகழகத்தில் ஏற்பட்ட இன்பம், துன்பமான காலத்திலும் கருணாநிதிக்கு பக்கபலமாக உடன் இருந்தவர் அன்பழகன். இவர் மடியில் தவழ்ந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தமிழரசன் போன்றவர்கள்.திமுக தோன்றிய காலத்தில் இருந்தே அன்பழகன் தான் அக்கட்சிக்கு பொதுச்செயலாளர். இனமான பேராசிரியர் என்கிற அடைமொழி அன்பழகனுக்கு மட்டுமே பொருந்தும், அளவிற்கு கட்சியிலும், ஆட்சியிலும் நடந்து கொண்டார் அவர்.
அழகிரியையும் அவரது ஆதரவாளர்களையும் கட்சியை விட்டு நீக்க கருணாநிதி முடிவு செய்த போது அன்பழகன் தனக்கு ஆதரவு அளிக்கவில்லை என்கிற கோபம் அழகிரிக்கு உண்டு. ஒரு கட்டத்தில் அன்பழகனை எதிர்த்து விமர்சனம் செய்து அறிக்கை கூட வெளியிட்டார் அழகிரி. ஸ்டாலின் இந்த அளவிற்கு கட்சியின் தலைவராக உயர்வதற்கு காரணமே அன்பழகன் தான் என்று நினைக்கத் தொடங்கினார் அழகிரி. கருணாநிதி உடல்நலம் குன்றிய போதும் சரி, அவர் இறப்புக்கு பிறகும் சரி , பேராசிரியர் அன்பழகன் கட்சியில் எடுத்த முடிவுகள் அனைத்தும் ஸ்டாலினுக்கு ஆதரவாகவே இருந்தது என்று அழகிரி நினைக்கிறாராம்.

DMK to pay tribute to Professor Anabhagan's body. Supported "A" teammates !!
கட்சியில் இருந்து தன்னை  நீக்கியபோது அழகிரி பொதுச்செயலாளர் அன்பழகனை நேரில் சந்தித்து பேசினார். இவர்கள் குடும்பத்திற்குள் ஒரு தரப்பு அழகிரிக்கு ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. அந்த நேரத்தில் அன்பழகனால் எந்த ஒருமுடிவும் மற்றவர்களுக்கு எடுப்பதை போல், அவரால் கருணாநிதி, ஸ்டாலினை மீறி எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை.தனக்கு கட்சியில் மீண்டும் வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதற்கு தன் குடும்பம் ஒருபக்கம் சதி செய்கிறது. இன்னொரு பக்கம் பேராசிரியர் தன் அதிகாரத்தை பயன்படுத்தாமல் மறுத்து வருகிறார் என்று வருத்தப்பட்டார் அழகிரி. இந்த கோபம் தான் அழகிரியை அன்பழகன் இறப்புக்கு கூட வரவிடாமல் அவரது மனம் கல்லானது என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

அன்பழகன் உடல்நலம் சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் இருந்த சமயத்தில் கூட அழகிரி வந்து பார்க்க வருவார் என்று பேராசிரியர் நினைத்தாராம்.இறந்த போதாவது அழகிரி வருவார் என்று அன்பழகன் குடும்பத்தார் ரெம்ப எதிர்பார்த்து காத்திருந்தார்கள். அழகிரி வந்திருந்தால் அண்ணா அறிவாலயத்தில் இனமான பேராசிரியர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அங்கே வைக்கப்பட்டிருக்கும்,. என்னதான் இருந்தாலும் அரைநூற்றாண்டு காலம் கலைஞருடன் தன் வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தவர், அறிவாலயத்தை தன் உயிர் மூச்சாக கொண்டிருந்தவர் அன்பழகன். அவரது கடைசி மூச்சுக்காற்று கூட அறிவாலயத்தை எட்டவில்லை. அவரது பூதல் உடல் அங்கு வைக்கப்படாதது வருத்தமளிப்பதாகவே கட்சி தொண்டர்கள் ஒருபக்கம் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.இன்னொரு பக்கம் அவரது குடும்பத்தினரும் ஸ்டாலின் மீது வருத்தத்தில் தான் இருக்கிறார்களாம்.

DMK to pay tribute to Professor Anabhagan's body. Supported "A" teammates !!
பேராசிரியர் அன்பழகன் இறந்து விட்டார் என்ற செய்தி அழகிரிக்கு எட்டியது. மதுரை சத்யசாய் நகர் வீட்டில் இருந்தவருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்கள். உடனே அழகிரி இல்லத்திற்கு இசக்கிமுத்து மன்னன் முபாரக் உதயக்குமார் கோபிநாதன் போன்றவர்கள் ஆஜராகி என்ன செய்றது அண்ணே வாங்க நாம்மளும் போய் இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு வரலாம் என்று அவரை அழைத்திருக்கிறார்கள். ஒரே வார்த்தையில் வேண்டாம்னு சொல்லிட்டாராம் அழகிரி. சரி அடுத்த நாளாவது போய் துக்கம் விசாரித்துவிட்டு அஞ்சலி செலுத்திட்டு வருவோம்னு கேட்டாங்களாம் வேண்டாம் உங்க வேலைய பாருங்கனு சொல்லியிட்டாராம் அழகிரி. கருணாநிதி மீது எவ்வளவு பாசம், மரியாதை வைத்திருந்தாரோ, அந்த அளவிற்கு அன்பழகன் மீது பாசம் மரியாதை வைத்திருந்தவர் அழகிரி. பேராசிரியர் இறப்புக்கு அழகிரி வராதது கட்சித் தொண்டர்களுக்கு வருத்தமளித்திருக்கிறது. திமுக என்றாலே ஸ்டாலின், அழகிரி என்றே கட்சித்தொண்டர்கள் மனதில் நிறைந்து காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நேரத்தில் அழகிரி அன்பழகன் இறப்புக்கு அஞ்சலி செலுத்த வராதது வருத்தமளிக்கதான் செய்கிறது என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.

DMK to pay tribute to Professor Anabhagan's body. Supported "A" teammates !!
கருணாநிதியின் துணைவியார் தயாளுஅம்மாள் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தான் இருக்கிறார். தன் தயாரை மட்டும் அடிக்கடி சென்னை சென்று பார்த்து உடல்நலம் விசாரித்து விட்டு வருகிறார் அழகிரி. தயாளுஅம்மாவைத் தவிர வேறு யாரும் அழகரியிடம் பேசுவதில்லையாம். இதுவே அழகிரிக்கு மிகுந்த மனவருத்தமாக இருக்கிறது என்கிறார்கள் அழகிரி உடன்பிறப்புக்கள். திமுகவில் அடுத்ததடுத்த சம்பவங்கள் இனி இதுபோல் தான் இருக்குமோ?....! 

Follow Us:
Download App:
  • android
  • ios