Asianet News TamilAsianet News Tamil

யார் திருடன்...? அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஷாக் கொடுக்கும் திமுக!

ஆளும் கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கிப்போய் இருப்பதால் மின்சாரம் திருடியதாக குற்றம்சாட்டுகிறது என திமுக மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

DMK to give shock to minister Jayakumar
Author
Chennai, First Published Dec 19, 2018, 1:45 PM IST

ஆளும் கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கிப்போய் இருப்பதால் மின்சாரம் திருடியதாக குற்றம்சாட்டுகிறது என திமுக மேற்கு சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார். 

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்காக, மாநகராட்சி விதிகளை மீறி, தி.மு.க.,வினர், திருட்டுத்தனமாக, மின்சாரம் எடுத்துள்ளனர். அவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என, மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் குற்றம்சாட்டி இருந்தார். DMK to give shock to minister Jayakumar

இது தொடர்பாக விளக்கம் கொடுத்து ஜெ.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ’’16.12.2018 அன்று தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி அண்ணா அறிவாலயஹ்திலும் அதனைத் தொடர்ந்து ராயப்பேட்டௌ ஒய்.எம்.சிஎ மைதானத்திலும் நடைபெற்றது. இந்தக் கூடத்துஇல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர்கள் சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன், நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். DMK to give shock to minister Jayakumar

கூட்டதிற்காக மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் நடைபெற்றது. இது அனைவருக்கும் தெரியும். சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு கழகத்திற்கு பன்மடங்காக அதிகரித்து வருவதால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விழாவிற்கு களங்கம் ஏற்படுத்த பத்திரிக்கையாளர்களிடம் மின் திருட்டு என வாட்ஸ் அப்பில் வந்த செய்தியை காண்பித்து குற்றம் சுமத்துகிறார்.

வாட்ஸ் அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துப் பேசினால், அமைச்சர் மீது எவ்வளவோ பேசலாம். ஆனால், திமுகவினர் என்றைக்கும் தரம் தாழ்ந்து ஈடுபட மாட்டார்கள். அமைச்சரின் பேச்சிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தலைவர் கலைஞர் சிலை நிகழ்ச்சியால், ஆளும் கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கிப்போய் இருப்பது நன்றாகத் தெரிகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios