dmk stalin description for why we are walkout from tamilnadu assembly

சட்டப்பேரவையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது மானிய கோரிக்கைகள் பற்றிய விவாதம் நடைபெறாமலேயே பேரவையை முடித்து வைத்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்.

இதற்கு திமுக உள்ளிட்ட தமிழக எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த 14 ஆம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில் தமிழக சட்டப்பேரவை கூடியது.

இதைதொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவையில் நடைபெற்ற பல்வேறு மானிய கோரிக்கை விவாதங்களை ஏற்காமல் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தது.

இதனால் திமுக வெளிநடப்பு செய்யவே சட்டப்பேரவைக்கு செல்வதாக மீடியாக்கள் மற்றும் வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளிநடப்பு செய்வது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, செயலற்ற அதிமுகவின் செயலபடுகளை சுட்டிக்காட்டவே திமுக வெளிநடப்பு செய்வதாகவும், வெளிநடப்பு செய்தாலும் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க உடனே திமுக அவைக்கு திரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், வெளிநடப்பை சில ஊடகங்கள் திசை திருப்பும் வகையில் வெளியிடுவது வேதனை அளிப்பதாகவும், சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் என்னதான் குறுக்கிட்டாலும் திமுக தொடர்ந்து வாதாடி வருவதாகவும் குறிப்பிட்டார்.