சென்னை பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்திக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்

முன்னாள்பிரதமரும், பா... மூத்ததலைவருமானவாஜ்பாய்கடந்த 17ம்தேதிவயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரதுஉடல்அரசுமரியாதையுடன்டெல்லியில்தகனம்செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வாஜ்பாயின் அஸ்தியைநாடு முழுவதிலும் உள்ள முக்கியநதிகளில் கரைக்கப்படும் என பாஜக அறிவித்தது. இதையடுத்து, டெல்லியில்நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலபாஜகதலைவர்களிடம்அஸ்திகலசங்களை பிரதமர் மோடி, மற்றும் அமித்ஷா ஆகியோர் வழங்கினார்.

தமிழகம் சார்பில் அஸ்திகலசத்தைபெறுக் கொண்ட தமிழிசைசவுந்தரராஜன் நேற்று மாலை 4.30 மணிக்குசென்னைகொண்டு வந்து பாஜக தமிழக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுகசெயல்தலைவர்ஸ்டாலின்இன்று காலை கமலாலயத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி கலசத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் அங்குவைக்கப்பட்டுள்ளவாஜ்பாயின்படத்திற்கும்ஸ்டாலின்மலர்தூவிஅஞ்சலிசெலுத்தினார். அவருடன் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உடன் வந்திருந்தார்.

வாஜ்பாயின்அஸ்திதமிழகத்தில்சென்னைஅடையாறு, ராமேஸ்வரம்கடல், கன்னியாகுமரிகடல், மதுரைவைகைஆறு, ஈரோடுபவானிஆறு, திருச்சிகாவிரிஆறுஆகியஇடங்களில்கரைக்கப்படுகிறது