பா.ஜ.க. இந்தியாவை கடந்த முறை ஆளும்போது மத்தியமைச்சராக இருந்தவர் பொன்.ராதாகிருஷ்ணன்.  இப்போது மீண்டும் அதே பா.ஜ.க.தான் நாட்டை ஆள்கிறது. இப்போது அவர் அமைச்சராக இல்லாவிட்டாலும் அட மாநில அளவிலாவது நச்சுன்னு ஒரு பதவியில் இருக்கணும்! இதுதான் அரசியல். ஆனால் தனக்குன்னு ஒரு சிறு ஆதரவு படையை வைத்துக் கொண்டு அப்படியே பா.ஜ.க.வினுள் சுத்தி வந்து கொண்டிருக்கிறார்.  2019 நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியில் நின்று தோற்றதும் சில மாதங்கள் சைலண்டாகவே இருந்தார். பெரிதாக அரசியல் பண்ணவேயில்லை.

ஆனால் கடந்த ஒரு மாதமாக பொன்னார் ஒவராக பொரிந்து தள்ள துவங்கியுள்ளார் தி.மு.க.வுக்கு எதிராக. சமீபத்தில் ஒரு பேட்டியில் தி.மு.க.வை வெளுத்துக் கட்டியிருக்கும் பொன்னார், அ.தி.மு.க.வின் அமைச்சர்களான ராஜேந்திர பாலாஜி மற்றும் ஜெயக்குமாரை விட மோசமாக தி.மு.க.வை தூற்றிப் பேசியுள்ளதுதான் அதிர்ச்சி கலந்த ஆச்சரியமாக்கியுள்ளது. என்ன சொல்லியிருக்கிறார் பொன்னார்?.....“நான் தரைக்குறைவாக யாரைப் பற்றியும் பேச விரும்பலை. ஆனாலும் ஒன்று சொல்கிறேன். 2021 சட்டசபை தேர்தலில் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தி.மு.க. ஆட்சிக்கு வராது, வராது, வரவே வராது. 

பிரசாந்த்  கிஷோருடன் இணைந்து அக்கட்சி ஒப்பந்தம் போட்டிருக்கிறதா என்று எனக்கு தெரியாது. அது இன்னும் தெளிவாகவில்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால், பிரஷாந்த் கிஷோரின் பெயரைக் கெடுக்க வேண்டும் எனும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். பிரஷாந்தின் சேப்டரையே குளோஸ் செய்துவிட வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கலாம். பொன்னார் இப்படி தங்கள் கட்சியையும், தலைவரையும் அநியாயத்துக்கு உரசி பேசியிருப்பதால் கடுப்பான தி.மு.க.வினர்...பொன்னார் இப்படி ‘நான் யாரையும் தரக்குறைவா பேச  விரும்பல’ என்று சொல்ல்லிவிட்டு, தரக்குறைவாக பேசியிருப்பதை அப்படியே....வடிவேலு, அரசியல்வாதி ‘வண்டு முருகன்’னாக செய்த ‘நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல! என்னா அடி!?’என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளியுள்ளனர். 
எங்குட்டு போனாலும் பா.ஜ.க.வுக்கு அடி விழுது பாவம்.