Asianet News Tamil

அதிமுகவில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய KKSSR அவர்களின் இன்றைய பரிதாப நிலை..!

 ராமசந்திரன் பேசுகையில் அனைத்து ஊர்களிலும் எல்லா ஜாமத்துகளிலும் சோதனை செய்தார்கள், ஆனால், நம் ஊரில் எந்த ஜாமத்துக்கும் செல்லவில்லை. அதிகாரிகளை நான் சத்தம் போட்டேன். எந்த தொந்தரவும் நம் ஆட்களுக்கு இல்லாதபடி வைத்திருக்கிறேன். ஏனென்றால் அனைத்தும் என் ஓட்டு என்று தெரியும். கொரோனா உள்ளது என்றால் அசிங்கம் இல்லையா பக்கத்து வீட்டுக்காரர் கூட பேசமாட்டார்.

dmk Sattur kkssr Ramachandran audio
Author
Virudhunagar, First Published Apr 12, 2020, 4:49 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

 அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், திமுக கழகத்தின் விருநுநகர் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன் பேசியதாக ஒரு ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில், மாமா மாமா என்று இருவர் உரிமையோடு அழைத்துக்கொள்ளும் அந்த உரையாடலில் நான் இஸ்லாமியர்களை திட்டியது உண்மை. ஆனால், கொரோனா பீதியில் இருக்கும் மாஸ் அணியாமல் வந்ததற்காக திட்டினேன். நீங்கள் இப்படி எச்சரிக்கையில்லாமல் இருக்காதீங்க. உங்கள் குடும்பம் பாதிக்குமா இல்லையா. நம்ம  தெருக்களில் தான் வந்து இருக்கிறது. அதனால் தான் போலீசார் தொந்தரவு செய்யுராங்க என்று திட்டினேன். 

மேலும், ராமசந்திரன் பேசுகையில் அனைத்து ஊர்களிலும் எல்லா ஜாமத்துகளிலும் சோதனை செய்தார்கள், ஆனால், நம் ஊரில் எந்த ஜாமத்துக்கும் செல்லவில்லை. அதிகாரிகளை நான் சத்தம் போட்டேன். எந்த தொந்தரவும் நம் ஆட்களுக்கு இல்லாதபடி வைத்திருக்கிறேன். ஏனென்றால் அனைத்தும் என் ஓட்டு என்று தெரியும். கொரோனா உள்ளது என்றால் அசிங்கம் இல்லையா பக்கத்து வீட்டுக்காரர் கூட பேசமாட்டார்.

மேலும், இது தொடர்பாக பீலா ராஜேசும் டெல்லி மாநாடுக்கு சென்று வந்தவர்கள் என்று பிரித்து பேசுகிறார் என்பதற்கு ஆமாம் ஆமாம் என்று சொல்கிறார். அருப்புக்கோட்டை சட்டமன்றத்தில் போலீஸ், தாசில்தார், மாவட்ட ஆட்சியர் தொந்தரவோ இல்லாமல் நான் பார்த்து கொள்கிறேன். அப்படி இல்லையென்றால் உங்களை கிறுக்காக ஆகியிருப்பார்கள் மல்லு கட்டியிருப்பார்கள் என்றும் பேசியுள்ளார். நான் அவர்களை திட்டியது உண்மை. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா என்றேன். மாஸ்க் போடதா இந்து, கிறிஸ்துவ மதத்தினரையும்  கண்டித்தேன். 

எதிர் தரப்பில் பேசிய நபர் நீங்கள் பல விஷயத்தை சொன்னதாக கூறுகிறீர்கள். ஆனால், இங்கு வாட்ஸ் ஆப் ஆடியோ வேகமாக பரவி கொண்டே போகின்றது. இந்த சம்பவத்தின் போது 3 பேரும் நாங்கள் இருந்தோம் திட்டியது உண்மைதான். தள்ளி நில்லுங்கப்பா உங்களால் தான் கொரோனா பரவுகிறது என்று நீங்கள் கூறியதாக தெரிவித்தனர். 

இதுக்கு பதிலளித்த  கேகேஎஸ்எஸ்ஆர் இது நம்ம தெரு. அப்படி இருக்கும் போது உங்களை இழப்பதற்கு நான் எப்படி சம்மதிப்பேன். புது பேருந்து நிலையத்தில் கடைபோடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படி இருந்த போதிலும் கடை போட அனுமதி வாங்கி கொடுத்தேன். நான் செய்யும் நல்ல செயல்கள் வெளிய வருவதில்லை. கேட்டது மட்டும் தான் வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் நம்முடைய ஆட்கள் கிட்ட தப்பா நினைக்கவேண்டும் என்று சொல்லுங்கள் என்றார்.

இதற்கு அந்த நபர் இந்த ஆடியோ வேகமாக பரவி வருகிறது. நீங்கள் ஒரு ஆடியோவாக பேசி வாட்ஸ் ஆப்பில் போட்டு விடுங்கள் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிடும். இதை எதுக்கு சொல்லரனா தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் முழுமையாக  சிஏஏ, என்.ஆர்.சி., பிரச்சனையில் முழுமையாக உங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறோம். மேலும், என்ன நடந்தாலும் எங்கள் ஓட்டு திமுகவுக்குதான் என்ற நிலை தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios