தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 158 இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சியமைத்தது. திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த 7 ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து முதல்வரின் தனி செயலாளர்களாக உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம் மற்றும் அனு ஜார்ஜ் உள்ளிட்ட நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். மேலும் முதல்வரின் தனிச்செயலாளரான உதயசந்திரனுக்கு கூடுதல் பொறுப்பாகச் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி டிஜிபி ஆக ஷகில் அக்தரும், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி ஆக கந்தசாமி ஐபிஎஸ், உள்நாட்டு பாதுகாப்பு ஐஜி ஆக ஈஸ்வர மூர்த்தி ஐபிஎஸ், தலைமையிட ஏடிஜிபியாக ரவி நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நுண்ணறிவு பிரிவு டிஐஜி ஆக ஆசியாமால் ஐபிஎஸ், சிறப்புப் பிரிவு சிஐடி எஸ்பி – அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சரவணன், திருநாவுக்கரசு, சாமிநாதன் ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.