திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!

திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அக்கட்சியில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கத்திற்கான காரணமும் வெளியாகியுள்ளது. 

DMK press secretary KS. Radhakrishnan removed.. Do you know the reason?

திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அக்கட்சியில் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இவரது நீக்கத்திற்கான காரணமும் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர், மல்லிகார்ஜுனா கார்கே ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மல்லிகார்ஜுனா வெற்றி பெற்றதை அடுத்து சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரான மல்லிகார்ஜுனா கார்கே குறித்து விமர்சனம் செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டது சர்ச்சையானது. 

DMK press secretary KS. Radhakrishnan removed.. Do you know the reason?

திமுக - காங்கிரஸ் கூட்டணியாக உள்ள நிலையில், திமுக செய்திதொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் இப்படி பதிவிட்டது சர்ச்சையையானது. இது  திமுக தொண்டர்கள் மற்றும் திமுக தலைவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

DMK press secretary KS. Radhakrishnan removed.. Do you know the reason?

இந்நிலையில்,  திமுக செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios