“நாமக்கல் MP சின்ராஜை, அதிமுக MLA பாஸ்கர் தரக்குறைவாகப் பேசியும் அடிக்கவும் முயற்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஸ்கரை அழைத்துக் கண்டிக்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இல்லை என்பதால் அதனைத் தமிழக ஆளுநராவது செய்ய வேண்டும்! ஒரு MP-க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை!” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு எம்.பி.க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.


திமுக சின்னத்தில் நின்று நாமக்கல்லில் எம்.பி.யாக வெற்றி பெற்ற கொமதேக கட்சியைச் சேர்ந்த. ஏ.கே.பி.சின்ராஜ் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கரோனா நிவாரணமாக தான் வழங்கிய நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்றும் நாமக்கல் எம்.எல்.ஏ. பாஸ்கர் அவருடைய வீட்டுக்கு முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாகவும் தனக்கு புகார் வந்துள்ளதாகப் பேசியதாக தெரிகிறது.