அதிமுக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவானார். ஜெயலலிதா மறைவை அடுத்து கட்சி சசிகலா - ஓ.பி.எஸ் என இரு தரப்பாக இரண்டாகப் பிளவுபட்டபோது, சசிகலா அணிக்கு ஆதரவாக இருந்தார்.  இதனையடுத்து ஓபிஎஸ் இபிஎஸ் ஒன்றாக இணைந்ததை அடுத்து தினகரன் பக்கம் இருந்தார். 

கட்சி ஆரம்பித்து சுமார் ஒரு வருடம் கூட ஆகாதநிலையில்  டிடிவி தினகரன் தரப்பிலிருந்து அவருக்கு அழுத்தங்கள் இருந்த நிலையில் திமுகவில் இணைந்தார். அவர் தனது ஆதரவாளர்கள் 1000 பேருக்கும் அதிகமானோருடன் திமுகவில் இணைந்தனர். செந்தில் பாலாஜியின் கரூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கு பதற்றத்தை  ஏற்படுத்தியிருந்த நிலையில் அவருக்கு கரூர் மாவட்ட செயலாளர் பதவியை கொடுத்துள்ளது திமுக தலைமை.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுஅவருக்கு பதிலாக கரூர் செந்தில் பாலாஜியை கரூர் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் செந்தில் பாலாஜியுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அதிமுகவில் சரி, தனியாக பிரிந்து வந்து தொடங்கப்பட்ட அமமுகவிலும் தினகரன் பெரிதாய் நம்பிக்கை வைத்தவர்களில் முக்கியமானவர் செந்தில்பாலாஜி. அதுமட்டுமல்ல செந்தில் பாலாஜி என்னுடைய கம்பியூட்டர் என சொல்லும் அளவிற்கு திறமை சாலி, இளைஞர் என்றாலும் கூட மிக தேர்ந்த அரசியல்வாதி அவர். 

ஜெயலலிதா இருந்த போது சில மூத்த மந்திரிகளுக்கு சிக்கல் வந்தபோது மிக சாதுர்யமாக அதை தீர்த்து வைத்தது செந்தில்தான். அதுமட்டுமல்ல, சைலண்ட்டாக வாயே திறக்காமல் வேலையை முடிப்பார். அப்படிப்பட்ட செந்தில் பாலாஜி இப்போது கொங்கு மண்டலத்தில் தனி சாம்ராஜ்யம் அமைக்க தீயா வேலை பார்த்து வருவது திமுகவின் பழைய கைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.