Asianet News TamilAsianet News Tamil

கவிப்பேரரசு வைரமுத்துவை வீழ்த்திட முடியாது... பாஜகவுக்கு அற்ப மகிழ்ச்சி... வைரமுத்துவுக்கு ஆதரவாக கொந்தளித்த மு.க. ஸ்டாலின்!

ஏற்கனவே ‘மீடு’ விவகாரம் எழுந்தபோதும் திமுக கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்தது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்தானது பற்றி மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். சிஏஏ விவகாரத்தில் அதிமுக, பாஜகவைப் பற்றி விமர்சித்தும் கோலப் போராட்டம் குறித்தும் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், ஒரு பகுதியில் வைரமுத்து நிகழ்ச்சி பற்றியும் கருத்துதெரிவித்துள்ளார்.
 

DMK P resident M.K.Stalin on Vairamuthu function bycot
Author
Chennai, First Published Dec 31, 2019, 9:15 AM IST

வைரமுத்துவுக்கு பட்டம் வழங்கும் விழாவைத் தடுப்பதன் மூலமாக கவிப்பேரரசுவை வீழ்த்திவிட முடியாது. ஆனால், அற்ப மகிழ்ச்சி அடைந்து கொள்வார்கள் என்று பாஜகவை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.DMK P resident M.K.Stalin on Vairamuthu function bycot
கவிஞர் வைரமுத்துவுக்கு எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று வைரமுத்துவுக்கு பட்டம் வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ஆண்டாள் பற்றி சர்ச்சையாகப் எழுதியதாக  தமிழக பாஜகவினர் வைரமுத்துவுடன் மல்லுக்கட்டினர். மேலும் பாடகி சின்மயி வைரமுத்து மீது ‘மீடு’ மூலம் பாலியல் புகாரை கூறினார். இந்த விஷயங்களை ராஜ்நாத் சிங்கிடம் எடுத்துக்கூறி அவரை இந்த விழாவுக்கு வரவிடாமல் தமிழக பாஜக செய்ததாகக் கூறப்படுகிறது.DMK P resident M.K.Stalin on Vairamuthu function bycot
ராஜ்நாத் சிங் சிங் இந்த விழாவுக்கு வராததால், பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் வைரமுத்துவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தார். கருணாநிதி குடும்பத்துடன் எப்போதும் நெருக்கமாக இருக்கும் வைரமுத்துவின் நிகழ்ச்சி ரத்தானது பற்றி திமுக எதுவும் கூறவில்லை. ஏற்கனவே ‘மீடு’ விவகாரம் எழுந்தபோதும் திமுக கருத்து எதுவும் தெரிவிக்காமல் அமைதி காத்தது. இந்நிலையில் வைரமுத்துவுக்கு பட்டம் வழங்கும் நிகழ்ச்சி ரத்தானது பற்றி மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். சிஏஏ விவகாரத்தில் அதிமுக, பாஜகவைப் பற்றி விமர்சித்தும் கோலப் போராட்டம் குறித்தும் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், ஒரு பகுதியில் வைரமுத்து நிகழ்ச்சி பற்றியும் கருத்துதெரிவித்துள்ளார்.

DMK P resident M.K.Stalin on Vairamuthu function bycot
 “சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எஸ்.ஆர்.எம். குழுமத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்வுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வருவதாக இருந்தது. வைரமுத்து மீதான அரசியல் பகைமை, தமிழ்ப்பகைமை காரணமாக மத்திய அமைச்சரை வரவிடாமல் தடுத்துள்ளார்கள். ஏற்கெனவே மூன்று டாக்டர் பட்டங்களை வாங்கியவர் வைரமுத்து. எத்தனையோ முறை தேசிய விருது வாங்கியவர் அவர். இந்த விழாவைத் தடுப்பதன் மூலமாக கவிப்பேரரசுவை வீழ்த்திவிட முடியாது. ஆனால், அற்ப மகிழ்ச்சி அடைந்து கொள்வார்கள்.” என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios