பாஜக தலைவரை திமுக எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களும் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது திமுக வட்டாரத்தை திகிலில் ஆழ்த்தியுள்ளது. 

திமுக முக்கிய நிர்வாகிகளை இழுக்க பாஜக பல வகைகளில் முயன்று வருகிறது. இந்த நிலையில்தான் திமுகவில் தற்போதைய எம்.பிக்களும், முன்னாள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பு வகித்த ‘ரட்சகரும், மில்க்’ எம்.பியும் பாஜக முக்கியத்தலைவரை இருமுறை ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. பாஜக தலைவரை மட்டுமல்ல அக்கட்சியின் முக்கியதுறையில் அமைச்சர் பதவி வகிக்கும் ஒருவரையும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. 

சமீபத்தில், திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, ‘ திமுகவில் இருந்து பலரும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறினார். ஆனால், இந்தச் சந்திப்பு தொகுதி ரீதியிலானது என திமுகவினர் கூறினாலும் ஏன் ரகசியமாக சந்திக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.