Asianet News TamilAsianet News Tamil

சபைக்கே வராத அன்புமணி அன்று மட்டும் சபைக்கு வந்தார்... குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவாக ஓட்டுப் போட்டார்... திமுக எம்.பி. கடும் தாக்கு!

தற்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டம் மற்றுமொரு சுதந்திர போராட்டமாக வெடிக்க வாய்ப்புள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் அரசே பேருந்துகளை தீயிட்டு கொளுத்திவிட்டு போராட்டக்காரர்கள் மீது பழி போட்டுள்ளது. இந்த விவகாரத்தை நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து பிறகு மனிதனைக் கடிக்கும் நிலை வந்துவிடும்.

DMK MP Slam pmk on Citizenship law favour vote
Author
Chennai, First Published Dec 16, 2019, 9:51 PM IST

பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஒருநாள் கூட நாடாளுமன்றத்துக்கு வந்ததில்லை. பதவியேற்ற பிறகு இந்த மசோதாவுக்கு வாக்களிப்பதற்காக மட்டுமே வந்தார் என்று திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.DMK MP Slam pmk on Citizenship law favour vote
 நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அது அமலுக்கு வந்துவிட்டது. இந்தச் சட்டத்தை வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மா நிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. நாடு முழுவதும் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்துவருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணி சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DMK MP Slam pmk on Citizenship law favour vote
இந்த ஆர்ப்பட்டத்தில் திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பட்டத்தில் பேசிய திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி காட்டமாகப் பேசினார். “வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார சரிவு ஆகியவற்றை திசைத்திருப்பும் விதமாக குடியுரிமை சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது.
தற்போது குடியுரிமை சட்டத்துக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் போராட்டம் மற்றுமொரு சுதந்திர போராட்டமாக வெடிக்க வாய்ப்புள்ளது. வழக்கம் போல் இந்த முறையும் அரசே பேருந்துகளை தீயிட்டு கொளுத்திவிட்டு போராட்டக்காரர்கள் மீது பழி போட்டுள்ளது. இந்த விவகாரத்தை நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால் ஆட்டை கடித்து, மாட்டை கடித்து பிறகு மனிதனைக் கடிக்கும் நிலை வந்துவிடும்.DMK MP Slam pmk on Citizenship law favour vote
பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஒருநாள் கூட நாடாளுமன்றத்துக்கு வந்ததில்லை. பதவியேற்ற பிறகு இந்த மசோதாவுக்கு வாக்களிப்பதற்காக மட்டுமே வந்தார். அன்புமணி மனசாட்சியோடு வாக்களித்திருந்தால் கோடிக்கணக்கான இஸ்லாமியர்கள் பயனடைந்திருப்பார்கள். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என ஆர்.எஸ். பாரதி பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios