ஒரே நேரத்தில் அக்கா தங்கைகள் 3 பேரும் போலீஸ்... போன் போட்டு வாழ்த்திய திமுக து.பொ.செ கனிமொழி...

ஒரே நேரத்தில் அக்கா தங்கைகள் என மூன்று சகோதரிகள் காவல்துறையில் தேர்வாகியுள்ள சம்பவம்  பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சகோதரிகளுக்கு திமுக  துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொலைபேசியில் வாழ்த்து கூறியுள்ளார்

.
 

DMK MP Kanimozhi congratulates 3 sisters who joined the police service at the same time

ஒரே நேரத்தில் அக்கா தங்கைகள் என மூன்று சகோதரிகள் காவல்துறையில் தேர்வாகியுள்ள சம்பவம்  பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சகோதரிகளுக்கு திமுக  துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தொலைபேசியில் வாழ்த்து கூறியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த  கீழ்ஆவதம்  கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன்- ஷகிலா தம்பதியர். இவர்களுக்கு ப்ரீத்தி, வைஷ்ணவி, நிரஞ்சனி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். வெங்கடேசன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். மூன்று மகள்களையும் மிகவும் கடினப்பட்டு உழைத்து படிக்க வைத்தார். இந்நிலையில் மூத்த மகள் ப்ரீதிக்கு திருமணமாகி  இரண்டு குழந்தைகள் உள்ளனர். இளம் வயதிலிருந்தே மூன்று பேரும் போலீசில் சேர வேண்டுமென உறுதியாக இருந்து வந்தனர். அதற்காக  கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வந்தனர்.

DMK MP Kanimozhi congratulates 3 sisters who joined the police service at the same time

இதையும் படியுங்கள்:  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. இபிஎஸ் மீது வழக்குப்பதிவா? அமைச்சர் ரகுபதி சொன்ன பரபரப்பு தகவல்.!

இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் சகோதரிகள் மூவரும் கலந்து கொண்டனர். தேர்வில் மூவரும் வெற்றி பெற்றனர், இந்நிலையில் மூன்று சகோதரிகளும் பொன்னேரி பகுதியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்துள்ளனர், இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட அவர்கள், ஊர் திரும்பியுள்ள நிலையில் அவர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த தந்தை வெங்கடேசன்,  பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது.

இதையும் படியுங்கள்: சொந்த நாட்டு மீனவனையே சுடுது.. இந்திய கடற்படையினரை பிடித்து ஜெயில்ல போடுங்க.. தலையில் அடித்துக் கதறும் சீமான்

ஆனால் தேர்வில் தோல்வியடைந்ததால் போலீசில் சேர முடியவில்லை. எனது ஆசை நிறைவேறாமல் போனது, இந்நிலையில் திருமணமாகி விவசாயக் கூலி வேலை செய்து வந்தேன், மூன்று பெண் குழந்தைகள் பிறந்தனர், அவர்களுக்கு எனது கஷ்டத்தை சொல்லி வளர்த்து வந்தேன், அவர்கள் போலீசாக வேண்டும் என உறுதியாக இருந்தனர். அதற்காக தீவிரமாக பயிற்சி செய்து வந்தனர். எங்களின் விவசாய நிலத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர், இந்நிலையில்தான் அவர்கள் மூவரும் காவலர்களாக தேர்வாகி இருக்கிறார்கள். என்  மகள்களின் மூலம் எனது ஆசை நிறைவேறி இருக்கிறது இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

DMK MP Kanimozhi congratulates 3 sisters who joined the police service at the same time

இந்த செய்தி அறிந்த திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி அவர்கள் அலைபேசி வாயிலாக வைஷ்ணவியை தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். வைஷ்ணவி அவர்களும் தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல் அரசியல் தலைவர் கனிமொழி கருணாநிதி அவர்கள்தான் என கூறி நன்றி தெரிவித்தார். வைஷ்ணவி, நிரஞ்சனி மற்றும் ப்ரீத்தி ஆகிய மூன்று சகோதரிகளும் திருவள்ளூர் காவல் பயிற்சியை முடித்துள்ள நிலையில், விரைவில் அவர்கள் காவல் பணியில் ஈடுபடவுள்ளனர்.

அக்கா தங்கைகள் என மூவரும் ஒரே நேரத்தில் தமிழக காவல்துறையில் சேர்ந்துள்ளதை அக்கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களும் அச்சகோதரிகளுக்கு பாராட்டுக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios