அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயக படுகொலை.. ஒன்றிய அரசுக்கு எதிராக ஓங்கி அடிக்கும் கனிமொழி
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியாகி உள்ள நிலையில், பலரும் இதில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே சிஜிஎல் தேர்வு நடத்துவதா? மத்திய அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை வெளியாகி உள்ள நிலையில், பலரும் இதில் விண்ணப்பித்து வருகின்றனர். இருப்பினும், இந்த தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கனிமொழியும் ஒன்றிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- உட்கட்சியில் உள்குத்து.! கோபத்தில் ஆக்சனில் இறங்கிய ஸ்டாலின் - திமுக தொண்டர்கள் டூ அமைச்சர்கள் ஷாக் !
இதுதொடர்பாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. மாறாக, அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை என கனிமொழி கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- திமுக துணைப் பொதுச் செயலாளராகிறார் எம்.பி. கனிமொழி? விரைவில் வெளியாகபோகும் அறிவிப்பு?