முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அசை்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். சமீபத்தில் வரி ஏய்ப்பு தொர்பாக இவரது 80 கோடி சொத்துகள் அமலாக்கத்துறை முடக்கியது. இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகர் முதல் மெயின் ரோட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அனுசுயா.

இந்நிலையில் ஜெகத்ரட்சகன் மனைவி அனுசுயா உடல்நிலை குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒருவார காலமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அனுசுயா உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் அடையாறில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஜெகத்ரட்சகனின் மனைவியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.