தேர்தலில் வெற்றி பெற்று 20 நாட்களை கூட கடக்கவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சி இல்லை. அதற்குள் திமுக எம்.பியின் உறவினர் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு அதிரடியாக எழுந்துள்ளது.

2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் அக்கட்சி அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்களை நில அபகரிப்பு புகார்களில் சிக்காதவர்கள் குறைவு. இப்போதும் நில அபகரிப்பு புகார்கள் தொழ்டர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. திமுக  அடுத்து ஆட்சியை பிடிக்காமல் போனதற்கும் நில அபகரிப்பு அடாவடிகளே காரணம் என இப்போது வரை பேசப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மீண்டும் திமுக எம்.பி உறவினர் மீது நில அபகரிப்பு புகார் அதிரடியாக கிளம்பி இருக்கிறது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளில் 37 இடங்களில் அமோக வெற்றி கிடைத்ததும் பழையபடி அடாவடியை திமுக ஆரம்பித்து விட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. பொள்ளாச்சி தொகுதி தி.மு.க., எம்.பி.,யான சண்முகசுந்தரத்தின் தாய்மாமன் வீடு உடுமலைப்பேட்டை அருகே இளையமுத்துார் பகுதியில் உள்ளது. 

இந்த வீட்டுக்கு அருகில் இருக்கும் நிலத்தை சண்முகசுந்தரம் தரப்பினர் விலை பேசி இருக்கிறார்கள். ஆனால், அந்த இடத்தை வேறொரு நபர் வாங்கி விட்டார். அதை வாங்கியவரிடம் 'எப்படி நீங்கள் எங்களை மீறி பத்திரம் பதிந்து விடுவீர்கள் எனப் பார்த்து விடுவோம்’ என மிரட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது. அத்தோடு 50 ஆண்டுகளாக அந்த இடத்தருகில் இருந்த வாய்க்கால் வழித்தடத்தையும் ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு சண்முகசுந்தரம் எம்.பியின் தாய்மாமன் தரப்பினர் அழித்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டு எழுந்துள்ளது. எம்.பியின் தாய்மாமன் என்பதால் எதிர்தரப்பினர் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தனைக்கும் தமிழகத்தில் திமுக ஆட்சி இல்லை. அதற்குள் புகார் கிளம்ப்பி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சியை கைப்பற்ற நினைக்கும் திமுக தலைமை இந்த விவகாரங்களில் தலையிட்டு ஆரம்பத்திலேயே தட்டி வைக்கவேண்டும் என திமுகவினரே கருத்து தெரிவித்து வருகின்றனர்.