“ஆ.ராசா மன்னிப்பு கேட்டே ஆகணும்.. புதுச்சேரியில் உருவ படத்தை செருப்பால் அடித்த அதிமுகவினர் !”
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சமீபத்தில் சென்னையில் விழா ஒன்றில் பேசிய திமுக எம்.பி ஆ,ராசா, ‘இந்துவாக நீ இருக்கிற வரை சூத்திரன், சூத்திரனாக நீ இருக்கிற வரை விபச்சாரியின் மகன், இந்துவாக நீ இருக்கிற வரை தீண்டத்தகாதவன், எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என்று பேசி இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு..புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளி விடுமுறையா ? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன புது தகவல்
ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்து மதத்திற்கு எதிராக , அவதூறாக , தரக்குறைவாக திமுக எம். பி. ஆ. ராசா பேசியது குறித்த கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா சொன்ன கருத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநில அதிமுகவினர் ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உப்பளம் அதிமுக தலைமை அலுவலகம் எதிரே மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஒன்று கூடி ராசாவின் உருவப்படத்தை கிழித்தும், செருப்பால் அடித்தும் அவருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?
இதனை அடுத்து பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் அதிமுக செயலாளர் அன்பழகன். அப்போது பேசிய அவர், ‘இந்துக்களின் மனதை புண்படும் வகையில் சர்ச்சைக்குறிய அளவில் பேசிய ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய அவர், ராசா புதுச்சேரி எப்போது வந்தாலும் அவருக்கு அதிமுக தகுந்த பதிலடி கொடுக்கும்’ என்று எச்சரித்தார்.
மேலும் செய்திகளுக்கு..EPS என்ன எம்ஜிஆர், ஜெயலலிதாவா? தேர்தல் வரப்போகுது பார்த்துக்கோங்க..எடப்பாடியை அதிரவைத்த முன்னாள் அமைச்சர்கள் !