கொரானா வைரஸ் காரணமாக கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா?” என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரானா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. சீனாவில் பரவத் தொடங்கிய கொரானா வைரஸ், 117 நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் 83 பேர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா, டெல்லியில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரானா வைரஸ் தடுப்பு  நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக கோயில்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகங்கள் சார்பில் அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன.


இந்நிலையில் கோயிலுக்கு வர வேண்டாம் என்ற அறிவிப்புக்கு திமுக கொள்கை பரப்புச் செயலாளும் எம்.பி.யுமான ஆ.ராசா விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நோய் வந்தால் பக்தகோடிகள் கோவிலுக்குபோய் எல்லாம்வல்ல கடவுளிடம்தான் வேண்ட முடியும்; கோவிலுக்கு வராதே என்றால் அது பக்தியா பகுத்தறிவா? ஆன்மீகமா அறிவியலா?” என்று ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.