DMK MLAs are in frustration on Stalin
மு.க.ஸ்டாலின் மீது 20 - 30 திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்கள் எடப்பாடி பழனிசாமின் ஆட்சி தொடர விரும்புவதாகவும் மைத்ரேயன் எம்.பி கூறியுள்ளார்.
அண்மையில், எடப்பாடி தலைமையிலான அரசுடன், ஸ்டாலின் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். கூறியிருந்தார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின், ஆக்கப்பூர்வமான கொள்கைகள் ஏதும் இல்லாமல் அரசியலில் கொடி பிடிக்க ஆசைப்படும் ஓ.பி.எஸ்.
அசிங்கமான குற்றச்சாட்டை கூறுவது எந்த அதிகாரமும் இல்லாமல் போய் விட்டதே என்ற ஆதங்கத்தில் அவர் துடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுவதாகவும் மு.க.ஸ்டாலின் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும், தமிழகத்தில் பாஜகவின் முகமூடியாக செயல்படுவதில் தனக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் உள்ள கடுமையான போட்டியில் திமுகவை வீணாக வம்புக்கு இழுத்து டெல்லியில் உள்ள தனது ஆசான்களிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்ள ஓ.பி.எஸ். முயற்சிப்பது நன்கு தெரிவதாகவும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், மைத்ரேயன் எம்.பி. இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, மு.க.ஸ்டாலின் மீது 20 - 30 திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறியுள்ளார்.
திமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர வேண்டும் என்று விரும்புவதாகவும் மைத்ரேயன் தெரிவித்தார்.
