அதிமுக அரசின் மக்கள் நலன் திட்டங்களை எப்போதும் திமுக வரவேற்கும் என போளூர் திமுக எம்எல்ஏ கே.வி. சேகரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதிக்கு உட்பட்ட ஒதலவாடியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை குத்து விளக்கு ஏற்றி திமுக எம்.எல்.ஏ. கே.வி. சேகரன் தொடங்கி வைத்தார். சர்க்கரை, ரத்த அழுத்தம், மார்பக புற்றுநோய், கண், பல்நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி மக்களை கவர்ந்தது. 

பின்னர், பேசிய திமுக எம்.எல்.ஏ. கே.வி. சேகரன் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஒரு ஞானி என்றும், கருணாநிதியும் மக்களுக்கான கருத்தை எழுதியுள்ளார் என்று பாராட்டினார். மேலும், அதிமுக அரசின் நல்ல திட்டங்களை நாங்கள் வரவேற்போம். இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நாங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும் , மக்கள் நலனுக்காக அதிமுக அரசு செய்யும் திட்டங்கள் அனைத்தையும் வரவேற்போம் என தெரிவித்துள்ளார். 

எதிர்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் பொதுமக்களிடையே நேரடியாக அதிமுக அரசைப் பாராட்டி பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.