அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கவிருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  இன்று மாலை 6 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாலை 5 மணிக்கு திமுக எம்.எல்.ஏ.க்கள்  கூட்டம் நடைபெறும் என்று கொறடா சக்கரபாணி அறிவித்தார். இந்த கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் கொறடா சக்கரபாணி தெரிவித்தார். 

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் குறித்து பேச வாய்ப்பளிக்குமாறு கோரினார். ஆனால், ஆளுநர் மறுக்கவே, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

இதனையடுத்து, சட்டப்பேரவையில் தனது அறையிலேயே திமுக எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தி முடித்து விட்டார். ஆகையால், அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.