குடியாத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ காத்தவராயன் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற காத்தவராயன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது அவர் மரணடமடைந்துள்ளார்.

காத்தவராயனுக்கு இதயநோய் இருந்து வந்த நிலையில் அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அவருக்கு வேறு சில காரணங்களால் அது குணமாகாமல் கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்த காத்தவராயன் தற்போது காலமாகியுள்ளார். திருமணம் செய்து கொள்ளாத காத்தவராயன் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நேற்று தான் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி காலமாகி இருந்தார். இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ மரணமடைந்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதையடுத்து தற்போது உசட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.