DMK MLA J.Anbalagan emphasis
குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகி, சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் குட்கா, பான் மசாலா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் பான், குட்கா தடையையும் மீறி தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குட்கா விற்பனையை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் போதைப் பொருட்கள், விற்பனையை தடுக்கக்கோரியும், குட்கா உள்ளிட்ட பொருக்ள் சட்டவிரோதமாக விற்பனைக்கு சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை டிஜிபி ராஜேந்திரன், காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் அனுமதித்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் எம்.எல்.ஏ. அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதே நேரத்தில், இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக சுகாதார துறை அலுவலர் சிவக்குமார், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்று கூறி அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், குட்கா முறைகேட்டில் சிக்கியுள்ள சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என்று, திமுக எம்எல்ஏ அன்பழகன் கூறியுள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய பதவி விலகளுக்குப் பிறகு சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குட்கா முறைகேட்டியில் சிக்கியுள்ள ராஜேந்திரனும் பதவி விலக வேண்டும் என்றும் எம்எல்ஏ அன்பழகன் கூறியுள்ளார்.
