Asianet News TamilAsianet News Tamil

திமுக முக்கிய அமைச்சர்களின் சீக்ரெட்..! டெல்லியில் கைமாறிய ஃபைல்கள்..! எடப்பாடியாரின் டெல்லி விசிட் பின்னணி.!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைமையில் புதிய அரசு அமைந்த அடுத்த நாளே அந்த மாநிலத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களை கைது செய்து சிபிஐ அதிரடி காட்டியது. இதே பாணியில் தமிழகத்தில் சில அதிரடிகளை அரங்கேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதைப்பற்றி பேசவே எடப்பாடி பழனிசாமியை டெல்லி அழைத்ததாக கூறுகிறார்கள். 

DMK Ministers Secret ..! Files transferred in Delhi
Author
Delhi, First Published Jul 27, 2021, 11:02 AM IST

அதிமுக உட்கட்சி பஞ்சாயத்து, சசிகலா விவகாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதாக கூறப்பட்டாலும் உண்மையில் அவரது இந்த பயணம் அதிமுக முன்னாள் அமைச்சர்களை பாதுகாப்பதற்கான முக்கிய நடவடிக்கை என்கிறார்கள்.

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைமையில் புதிய அரசு அமைந்த அடுத்த நாளே அந்த மாநிலத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களை கைது செய்து சிபிஐ அதிரடி காட்டியது. இதே பாணியில் தமிழகத்தில் சில அதிரடிகளை அரங்கேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அதைப்பற்றி பேசவே எடப்பாடி பழனிசாமியை டெல்லி அழைத்ததாக கூறுகிறார்கள். ஓபிஎஸ் – இபிஎஸ் இரண்டு பேர் டெல்லி சென்றாலும் பிரதமர் மோடியை சந்தித்தது மட்டும் அல்லாமல் அவர்கள் இரண்டு பேருக்கும் தனித்தனி அசைன் மென்ட் கொடுத்ததாக கூறுகிறார்கள். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுமே மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டிருந்தார்.

DMK Ministers Secret ..! Files transferred in Delhi

ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்காமல் உங்களை பிரதமர் சந்தித்தால் நன்றாக இருக்காது என்று அப்போது பதில் வந்தது. இதற்கிடையே கொரோனா பரவல் பிரச்சனையால் எடப்பாடி – மோடி சந்திப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடைபெற்றது. இந்த தகவல் உடனடியாக டெல்லிக்கு உளவுத்துறை மூலம் பறந்துள்ளது. அது பற்றிய விவரங்களை தமிழக அரசியலுக்கான பொறுப்பாளர் ஒருவர் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் இருந்து கேட்டதாகவும், அதன் பின்னணியை எடப்பாடி பழனிசாமி தரப்பு புட்டு புட்டு வைத்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் திமுக அரசுக்கு சில விஷயங்களில் லகான் போட பாஜக விரும்புவதாக எடப்பாடி தரப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

DMK Ministers Secret ..! Files transferred in Delhi

அப்போது தான் ஆட்சிக்கு வந்த உடனயே முக்கிய மூன்று அமைச்சர்கள் மேற்கொண்ட முக்கியமான சில டீலிங்குகள் தொடர்பாக தனக்கு தெரிந்த தகவல்களை எடப்பாடியால் டெல்லிக்கு பாஸ் செய்ததாக கூறுகிறார்கள். அதனை டெல்லி கிராஸ் செக் செய்த போது விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதற்கான வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்தே அந்த முக்கிய விவகாரங்கள் குறித்து மேலதிக தகவல்கள் பெற எடப்பாடிய டெல்லி அழைத்ததாக கூறுகிறார்கள். செல்லும் போதே கடந்த ஆட்சியில் தனது வசம் இருந்த அந்த துறை, கொங்கு மண்டலத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களிடம் இருந்த அந்த இரண்டு துறைகளில் தற்போது நடைபெறும் கொடுக்கல் வாங்கல் ஆதாரத்தை அதிகாரிகள் உதவியுடன் எடப்பாடி தரப்பு திரட்டி சில முக்கிய விஷயங்கள் அடங்கிய பைல்களை டெல்லிக்கு கொண்டு சென்று கொடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

DMK Ministers Secret ..! Files transferred in Delhi

தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கை தொடரும் பட்சத்தில் டெல்லி சிபிஐ அல்லது அமலாக்கத்துறை மூலமாக சில முக்கிய திமுக புள்ளிகளை டார்கெட் செய்யும் என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios