இது பிறந்தநாள் பரிசா.!! முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த திமுகவினர் - அடேங்கப்பா..!
தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்ற கழக தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும், கட்சித் தொண்டர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். 'மார்ச் 1 திராவிட பொன்நாள்' முயற்சி... முயற்சி... முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்று கருணாநிதி நினைவிடத்தில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், ஆளுநர் ஆர்.என். ரவி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜாகிர் ஷா என்பவர் திமுக கொடி போர்த்திய ஒட்டகத்துடன் அறிவாலயம் வந்து அதை முதல்வருக்கு பரிசாக வழங்கினார். இது அனைவரிடத்திலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதேபோல் பேனா, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பலரும் பரிசாக வழங்கினார்கள்.
அமைச்சரும், முதல்வர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் மேன்மைக்காகத் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வரும் கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
அப்போது முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தோம் என்று பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலிய தூதர் வெளியிட்டுள்ள வீடியோவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த திமுக தொண்டர்களால் அண்ணா அறிவாலயம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல முதல்வர் ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொல்ல வந்த தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட மரக்கன்றுகள், தொண்டர்களால் குப்பை போல் தெருவில் போடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்