Asianet News TamilAsianet News Tamil

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலா? அல்லது வாரிசு அரசியலின் காட்சியா? குஷ்பு விமர்சனம்..!

டாக்டர் கலைஞரின் மகன் தலைமையில் அரசியல் குடும்பக் குறி கொண்ட ஒவ்வொரு பெண்ணும் முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள். 

DMK Magalir Manadu...kushboo criticized tvk
Author
First Published Oct 15, 2023, 8:32 AM IST

வாரிசு ஆட்சியை மட்டுமே நம்புபவர்கள் என்று நாங்கள் சொல்லியதை சரியென திமுக நிரூபித்துள்ளது என திமுக மகளிரணி சார்பில் நேற்று நடைபெற்ற மகளிர் உரிமை மாநாடு குறித்து குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். 

திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி முன்னிலை வகித்தார்.

இதையும் படிங்க;- 100 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பெரியார்.. தமிழகம் தான் முன்மாதிரி.. பிரியங்கா காந்தி பேச்சு.!!

DMK Magalir Manadu...kushboo criticized tvk

இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, திரிணமூல் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ், பீகார் மாநில உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் லெஷி சிங், டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிட்லன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலா அல்லது வாரிசு அரசியலின் காட்சியா?? என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படிங்க;- பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை.. ஜனாதிபதிக்கே இந்த நிலைமை.. திமுக எம்பி கனிமொழி பேச்சு..

DMK Magalir Manadu...kushboo criticized tvk

இதுகுறித்து நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலா அல்லது வாரிசு அரசியலின் காட்சியா?? இந்திரா காந்தியின் மருமகள் & ராஜீவ் காந்தியின் மனைவி, முகமது முப்தி சயீத் சாப்பின் மகள், ராஜீவ் காந்தியின் மகள், சரத் பவாரின் மகள், அகிலேஷ் யாதவின் மனைவி, டாக்டர் சந்தோஷ் மோகன் தேவ்யின் மகள்,  கலைஞரின் மகள்.

 

 

டாக்டர் கலைஞரின் மகன் தலைமையில் அரசியல் குடும்பக் குறி கொண்ட ஒவ்வொரு பெண்ணும் முக்கிய இடத்தைப் பெறுகிறார்கள். இந்தியா கூட்டணியில் வெற்றி பெற்ற எந்தப் பெண்ணும் தன் தந்தையோ, கணவனோ, அரசியல் குடும்பப்பெயரோ இல்லாமல் தானே உருவானார்களா? வாரிசு ஆட்சியை மட்டுமே நம்புபவர்கள் என்று நாங்கள் சொல்லியதை சரியென திமுக நிரூபித்துள்ளது என குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios