100 ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன பெரியார்.. தமிழகம் தான் முன்மாதிரி.. பிரியங்கா காந்தி பேச்சு.!!
பெரியார் வழியில் அண்ணாவும், கலைஞரும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள். சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது என்று கூறியுள்ளார் பிரியங்கா காந்தி.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக மகளிர் உரிமை மாநாடு சென்னை ஒய்எம்சிஏ நந்தனம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனி ராஜா, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பின ராக்கி பிட்லன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதில் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “ 100 ஆண்டுகளுக்கு முன்பே 'பெண் ஏன் அடிமையானாள்' என்று கேள்வி எழுப்பியவர் பெரியார். அவர் கேள்வி எழுப்பி 100 ஆண்டுகளுக்கு பிறகும் பெண் அடிமைத்தனம் இன்றும் உள்ளது” என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “சமூகத்திற்கு அன்பையும், போராடும் குணத்தையும் கற்றுத் தந்தது பெண்களே.
பெரியார் வழியில் அண்ணாவும், கலைஞரும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள். சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது. நாம் முழுமையாக சமத்துவத்தை பெற இன்னும் உழைத்தாக வேண்டும்” என்று மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசியுள்ளார்.