நமக்கு நாமே நடைபயணம் எனும் திட்டத்தை வகுத்துகொடுத்து அதில் A TO Z சூத்ரதாரியாக இருந்தவர் சுனில். இளைஞரான இவர் பிரஷாந்த் கிஷோரோடு கைகோர்த்து வேலை செய்த அனுபவத்தால் மு.க ஸ்டாலினுக்கு அரசியல் ஆலோசகர் எனும் உயரிய பதிவியைப் பெற்றார். 

நமக்குநாமே நடைபயணத்தின் மூலம் திமுக தலைவர் ஸ்டாலினை கலர்கலராக உடை அணியவைத்து மேலும் இளமையாக காண்பித்தவர் ஆவார் இவர் . நமக்கு நாமே நடைபயணத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து சட்டமன்ற , நாடாளுமன்ற தேர்தலையும் சுனில் தலைமையேற்றிருந்த  ஓஎம்ஜி எனப்படும் ஒன் மேன் குரூப் வழிநடத்தியது அனைவரும் அறிந்ததே.  சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபரின் மகனான சுனில்,   வெளிநாட்டில் எம்.பி ஏ பட்டம்பெற்ற ஆவர்,  உலக புகழ் பெற்ற அரசியல் திட்டமிடும் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்தவர்  இவர். குஜராத்தில் மூன்றாவது முறையாக  பிரதமர் மோடி முதலமைச்சர் ஆனபோது பிரசாந்த் கிஷோர் குழுவில் இணைந்து பணியாற்றியவர் ஆவார்.

 

இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது  இவர் வெற்றிக்கான வியூகங்களை தெளிவாக திட்டமிட்டு மேற்கொண்டதால் 39 க்கு 38 என்ற கணக்கில் திமுக அமோக வெற்றி பெற்றது என கூறுகின்றனர். உள்விவகாரம் அறிந்தவர்கள். இதுமட்டுமின்றி திமுக தலைவர் ஸ்டாலின் இல்லத்திற்கே நேரடியாக சென்று,  தினந்தோறும் அவருடன் ஆலோசனை நடத்தும் அளவிற்கு செல்வாக்கோடு இருந்தவர்  இவர் . திமுக தலைவர் மட்டுமின்றி அவரது மகன் மற்றும் மருமகன் சபரீசனுக்கும் மிகவும் நெருக்கமான நபராக வலம் வந்தார்.

 

திமுக தலைமை குடும்பத்தில் இவ்வளவு அதிகாரம் மிக்க நபராக வலம் வந்த சுனில்,  திமுக தலைமை இடம்பெற்றுள்ள முக்கிய வாட்ஸ்ஆப் குரூப்களில் இருந்து திடீரென வெளியேறியதாக கூறப்படுகிறது.   ஒரு கட்டத்தில் கட்சியையே சுனில்தான் வழி நடத்துகிறார் என்ற பேச்சும் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்த நிலையில்தான் சுனில் ஓஎம்ஜி நிறுவனத்தின்  தலைவர் பதிவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாகவும்,  அதனால் வாட்ஸ் ஆப் குழுக்களில் இருந்து வெளியேறியதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது. 

திமுகவின் திட்டமிடும் குழுவில் இருந்து ராஜினாமா செய்த சுனிலை தங்கள் பக்கம் இழுக்க எதிர் தரப்பினர் வேலைகளை தொடங்கிவிட்டதாக தகவல்கள் பரபரக்கின்றன.