முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசுவதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக அமைச்சர்கள் ஊழல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தார். இதை விமர்சித்த முதல்வர் எடப்பாடியை பழனிசாமி அறிக்கை நாயன் ஸ்டாலின் என விமர்சித்திருந்தார். இந்நிலையில், சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ஆளும் கட்சியின் ஊழல் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டி பேசுவதுதான் எதிர்க்கட்சிகளின் வேலை. ஊழல் வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்க  தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், குடிமாமரத்து பணியில் அரசு சாதனை செய்யவில்லை. ஊழல் தான் செய்து வருகின்றனர். நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன் என்று விமர்சித்திருந்தார். இந்நிலையில், ஊழலற்ற நிர்வாகத்தை அதிமுக அரசு நடத்துகிறது. ஊழலின் ஒட்டு மொத்த உருவமே திமுக தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்துகிறது. ஊழலின் மொத்த உருவமே திமுக தான். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசுவதை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.