பிரேமலதா உடனான செய்தியாளர் சந்திப்பின் போது, திமுக வை பற்றி பல்வேறு விமர்சனங்களை வைத்து உள்ளார். கூட்டணி குறித்து திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி திமுக பொருளாளர் துரைமுருகன் பேசிய கருத்துக்கு பதிலடி கொடுத்து உள்ளார். 

அப்போது, ஓரிரு நாட்களில் தேர்தல் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும், திமுக, அதிமுக இருதரப்பிடமும் தேமுதிக பேசியதாக எழுப்பப்படும் கேள்வியே தவறானது, கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறியும் இல்லை, குழப்பமும் இல்லை, திமுக தலைமை பற்றி எல்.கேசதீஷ் இடம் துரைமுருகன் பேசியதை முதலில் அவர் தெரிவிக்கட்டும், அதன் பிறகு எங்களது நிர்வாகிகள் துரைமுருகனிடம் என்ன பேசினார்கள் என்பதை தெரிவிக்கிறேன். சாதாரணமான விவகாரத்தை சூழ்ச்சி மூலம் திமுக பூதாகரமாக்கி உள்ளது

திமுக என்றாலே தில்லுமுல்லு கட்சி..இதை அன்றே எம்ஜிஆர் மக்கள் மனதில் பதிய வைத்துவிட்டு சென்று உள்ளார். தேமுதிகவை பழிவாங்கும் நோக்கத்தோடு திமுக செயல்படுகிறது

எது நாகரீகம் ? எது அநாகரீகம் ? என்பதை முதலில் செய்தியாளர்களும், எதிர் தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். விஜயகாந்த் உடனான சந்திப்பின் போது அரசியல் பேசவில்லை என்று முதலில் ஸ்டாலின் சொல்லட்டும்..பிறகு அதற்கு பதில் நான் தருகிறேன். யாரோ வந்து கூட்டணி குறித்து பேச வந்துள்ளனர் என்று துரைமுருகன் நேற்று பேசி இருந்தார். யாரென்றே தெரியாத நபர்களை துரைமுருகன் தன்னுடைய வீட்டில் கூட்டணி விஷயம் பேச அனுமதிப்பாரா ?

வயது மூப்பின் காரணமாக துரைமுருகன் தவறாக ஏதாவது உளரினாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. திமுக என்றாலே திருட்டு கட்சி என்று அன்றே எம்ஜிஆர் கூறிவிட்டு சென்றுள்ளார் என காரசாரமாக பேட்டி கொடுத்து உள்ளார்.

கடைசியாக, கூட்டணி குறித்து என்ன முடிவு செய்து உள்ளீர்கள் என்ற  கேள்விக்கு, இவ்வளவு நாளா பொறுமையாக தானே இருந்தீங்க.. இன்னும் 2  நாட்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.. நல்ல முடிவை அறிவிப்போம் என தெரிவித்தார் பிரேமலதா