குற்றச்சாட்டு வைத்தால் அதற்கு பதில் சொல்ல திராணியில்லாமல், குற்றம்சாட்டியவர்களை மிரட்டி பணிய வைக்கும் ரவுடி கட்சிதான் திமுக என மாரிதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். 

திமுகவினர் செய்யும் முறைகேடுகளை, தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆதாரத்துடன் வெளியிட்டு  விமர்சிப்பவர்  மாரிதாஸ்.  அதே போல்  மத்திய பாஜக அரசு கொண்டுவரும் ஒவ்வொரு மக்கள் நல திட்டங்களையும் ஆதரித்து தனது கருத்துக்களை சமூக வலைதளங்களில் அவர் பதிவு செய்து வருகிறார்.  இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை  திமுக கடுமையாக விமர்ச்சித்து வரும் நிலையில், திமுகவுக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது, என தகவல் வெளியிட்டு புழுதியை கிளப்பினார் மாரிதாஸ், அதுவரை நெஞ்சை நிமிர்த்தி பேசி வந்த திமுகாவின் மையமே ஒரு கணம் ஆட்டம் கண்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  

தீவிரவாத அமைப்புகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுக போராட்டம் நடத்துகிறது என்பதுதான் அந்த குற்றச்சாட்டு. அதற்கான ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டு தகவல்களை புட்டு புட்டுவைத்தார் மாரிதாஸ் . ஸ்டாலினுக்கு யார்யாருடன்  தொடர்பு உள்ளது அவருக்கு எங்கிருந்தெல்லாம் பணம் வருகிறது என்று அவர் விளக்கமாக கூறினார்.  தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படும் திமுகவை ஏன் தடை செய்யக்கூடாது என்று அவர் அப்போது எழுப்பிய கேள்வி திமுகவை நடுநடுங்கவைத்து விட்டது. 

மாரிதாஸ் வைத்த குற்றசட்டுகளால் எரிச்சலடைந்த திமுக, மாரிதாஸ், தங்களின் மீது அவதூறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார். அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று அவர் மீது புகார் கொடுத்தது. இதற்கிடையே பாஜகவின் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மாரிதாஸ், திமுகவினர் மீது நான் வைத்து குற்றசாட்டிற்கு இதுவரை பதில் இல்லை என்றார் மாறாக  தினமும் காலை முதல் இரவுவரை தொலைபேசியில் அழைத்து திமுகவினர் கீழ்த்தரமான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர் என்றார்.  

இன்னும் ஒரு சிலரோ, திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் முதல் குறி உனக்குதான் என்றும் என்னை  எச்சரிக்கின்றனர்  என்று அவர் கூறினார். ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு வைத்தால்  அதற்கு உரிய பதில் சொல்லமுடியாத திமுக தலைவர் கட்சி ஆட்களை ஏவி தன்னை மிரட்டுவது கோழைத்தனம் என்று திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்தார். மிரட்டி பணிய வைக்க முயற்ச்சி செய்யும் ரவுடி கட்சிதான் திமுக என்று மாரிதாஸ் கடுமையாக சாடினார்.