திமுக உள்கட்சி தேர்தல்.. தலை சுற்ற வைக்கும் அரக்கோணம் தனித் தொகுதி.. புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா.??
திமுகவில் உட்கட்சி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதில் அரக்கோணம் தேர்தல் களம் வெப்பம் நிறைந்ததாக மாறியுள்ளது. அடுத்த ஒன்றிய செயலாளர் யார் என்பதற்கான போட்டி கடுமையாக உள்ளது.
திமுகவில் உட்கட்சி தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதில் அரக்கோணம் தேர்தல் களம் வெப்பம் நிறைந்ததாக மாறியுள்ளது. அடுத்த ஒன்றிய செயலாளர் யார் என்பதற்கான போட்டி கடுமையாக உள்ளது. தனித் தொகுதி என்பதால் அங்கு ஒரு மீண்டும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரே ஒன்றிய செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதிலும் மூவருக்கு இடையே அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது. அதில் யாருக்கு வாய்ப்பு என்பது குறித்து களநிலவரத்தை பார்ப்போம்
அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் ஆர். தமிழ்செல்வன். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்பதால் தொகுதியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார் தற்போது 74 வயதை கடந்துள்ள இவர் கட்சிக்குள் பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. தேர்தலில் சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராகவே சிலரை தூண்டிவிட்டு உள்ளடி வேலை செய்வது போன்று அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றது. வயது முதிர்வின் காரணமாக இவர் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவியை ஒன்றியக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வைத்து படுதோல்வி அடைந்தார் என்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறிப்பாக அரக்கோணம் தனி தொகுதியில் உள்ள ஒரே பட்டியலின சமூகத்தை சார்ந்தவர் இவர் என்பதால் இவரைப்பற்றி மாவட்ட தலைமைக்கு ஏராளமான புகார்கள் சென்றும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால் தற்போது இவருக்கு எதிரான அதிருப்தி குரல்கள் அதிகரித்திருப்பதால் இவரை நீக்குவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதாக கூறப்படுகிறது. இவருக்கு மாற்றாக அதே சமூகத்தை சார்ந்த லட்சுமிகாந்தன், சசிகலா பிரபாகரன், கோபிநாத் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது. இதில் லட்சுமிகாந்தன் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் சசிகலா பிரபாகரன் அவர்கள் கட்சியில் எவ்விதமான ஈடுபாடும் காட்டாததும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இதேநேரத்தில் கோபிநாத் என்பவர் தொடர்ந்து 2 முறை பஞ்சாயத்து தலைவராக தொடர்வதும் கட்சியினரிடையே நன்மதிப்பை பெற்றவராகவும் இருப்பதாக கூறப்படுகிறது கட்சியில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பட்சத்தில் தற்போது 35 வயதாகும் கோபிநாத் என்பவருக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அரக்கோணம் மேற்கு ஒன்றிய செயலாளராக வழக்கறிஞர் சௌந்தர் பதவி வகிக்கிறார் இவர் முதலியார் சமூகத்தைச் சார்ந்தவர் இவரின் மனைவி நிர்மலா செளந்தர் அவர்கள் அரக்கோணம் ஒன்றிய குழு தலைவராக இருக்கிறார் கட்சியின் மூத்த உறுப்பினரான இவருக்கு நிர்வாகிகள் இடையேயும் உறுப்பினர்களிடையேயும் நல்ல ஆதரவு காணப்படுகிறது ஒன்றிய குழு தலைவராக நிர்மலா செளந்தர் அவர்களின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாக ஒன்றிய குழு உறுப்பினர்களும் அரசு அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். மேலும் இதுவரை யாரும் இவரை எதிர்த்து களப்பணி செய்யாத நிலையில் மீண்டும் இவரே தேர்ந்தெடுக்க படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது.
அரக்கோணம் மத்திய ஒன்றிய பொறுப்பு குழு தலைவராக ஹரிதாஸ் பதவி வகிக்கிறார் இவரும் முதலியார் சமூகத்தைச் சார்ந்தவர் இவர் கடந்த முறை ஒருங்கிணைந்த அரக்கோணம் ஒன்றியத்தில் ஆர் தமிழ்ச்செல்வனை எதிர்த்து போட்டியிட்டு நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதால் தற்போது நேரடியாக பொறுப்புக் குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார் இவர் சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டதால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது இவரது அரசியல் பாணி பெரும்பாலான நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை எனவும் இதன் காரணமாக பசுபதி என்பவர் தலைமையில் படையெடுக்கும் சில நிர்வாகிகள் மாவட்ட தலைமைக்கு நெருக்கமானவர்களை சந்தித்து அவர்கள் மூலம் காய் நகர்த்தும் பணியும் நடைபெற்று வருகின்றது இன்னொருபுறம் வீசி முனுசாமி ரெட்டியும் கிளை செயலாளர்களை சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர் எனவே இங்கு களம் மும்முனை போட்டிக்கு தயாராகி வருகிறது
நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு இவர் வன்னியர் இனத்தை சார்ந்தவர் இவரது மனைவி பவானி வடிவேல் சைனபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார் இவர் பட்டியலின வகுப்பை சார்ந்தவர் என்பதால் இரு சமூகங்களில் ஆதரவும் இவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் இவரது பெயர் பரிசீலனையில் இருப்பதும் பின்னர் நிராகரிக்கப்படும் தொடர்கதையாகி வருகிறது அதிமுக மற்றும் பாமகவும் மாறிமாறி ஆதிக்கம் செலுத்திய நெமிலி ஒன்றியத்தில் திமுக கொடி நாட்டியத்தில் வடிவேலு பங்கு அளப்பரியது என்கின்றனர். கட்சிப் பணியில் இவர் காட்டும் துடிப்பும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் விதமும் அனைவராலும் பாராட்டப்படுகிறது.
இந்த தேர்தலில் அதே ஊரை சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்ஜிசி பெருமாள் என்பவர் வடிவேலை எதிர்த்து களப்பணி செய்து வருகிறார் இவரது மனைவி சுந்தராம்பாள் தற்போது மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இளைஞரணி மாவட்ட துணை செயலாளராக இருக்கும் எஸ்ஜிசி பெருமாள் மாவட்டத் தலைமையிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி வடிவேலுக்கு எதிராக காய் நகர்த்தி வருகிறார் என்னதான் இருமுனை போட்டியில் களம் சூடேறி காணப்பட்டாலும் வடிவேல் அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர் காந்தி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ள உட்கட்சித் தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற வேண்டுமென்பது திமுக நிர்வாகிகளின் கோரிக்கையாக உள்ளது.
கடந்த பதினைந்து ஆண்டுகளாக திமுக அரக்கோணம் பகுதியில் இழந்த செல்வாக்கை நிலைநாட்ட பல்வேறு யூகங்களை வகுத்து வரும் நிலையில் அரக்கோணம் தனி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வலுவாக உள்ளது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்புகளை வகிக்கும் நிர்வாகிகள் அதிமுக ௭ம்௭ல்ஏ ரவியிடம் நெருங்கிய தொடர்பில் இருப்பதே காரணம் ௭ன்பது வெட்ட வெளிச்சம் ௭ன்று பொருமுகின்றனர்.
அரக்கோணம் தனி சட்டமன்றத் தொகுதியை திமுக கைப்பற்ற முனைப்பு காட்டும் வகையில் அரக்கோணம் ஒன்றியத்தில் புகாருக்குள்ளான பழைய நிர்காகிகளை களை ௭டுத்துவிட்டு புதிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் திமுக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது மே 5-ஆம் தேதி நடைபெற்ற நகர கழக செயலாளர் மற்றும் நகர நிர்வாகிகளுக்கான தேர்தலில் பழைய நிர்வாகிகளே தேர்ந்தெடுக்கப்பட்டதால் திமுக வட்டாரங்களில் சலசலப்பு நிலவி வருகிறது.
ஆளும் கட்சியாக திமுக இருந்தும், தேர்தல் நடத்தும் அலுவலர் என்று ஒருவரை நியமித்தும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெறாமல் ஏற்கனவே பொறுப்பில் இருக்கும் கடுமையான புகாருக்குள்ளான நிரவாகிகளுக்கே மீண்டும் பதவி வழங்கப்பட்டு வருவது திமுக அரக்கோணம் சட்ட மன்ற தொகுதியை அதிமுகவிற்கு நிரந்தரமாக தாரைவார்க்க மாவட்ட தலைமை தயாராகி விட்டதா ௭ன நிர்வாகிகளுக்குள் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது.
புகாருக்குள்ளான பழைய நிர்வாகிகளை நியமிக்க ஏன் தேர்தல் நடத்த வேண்டும்? எதற்காக தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்? ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகளிடம் ரகசியமாக ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே பெறப்படுகிறது போட்டியிட விரும்பும் பலரும் மிரட்டப்படுகிறார்கள் எனவும் ௮ரக்கோணம் தொகுதி திமுக வட்டாரங்களில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.
திமுக உட்கட்சி கோஷ்டி மோதலை ஒழித்துகட்டி இளைஞர்களை நிர்வாகிகளாக நியமித்து புதிய ரத்தம் பாய்ச்சினால் மட்டுமே ௮ரக்கோணம் தொகுதியில் திமுகவை காப்பாற்ற முடியும். குறிப்பாக அதிமுக ௭ம்௭ல்ஏ ரவியிடம் நெருக்கம் காட்டிவரும் ஒன்றிய நிர்வாகிகளை ஒழித்தால் மட்டுமே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெரும் வாய்ப்புள்ளது என ராணிப்பேட்டை மாவட்ட உ.பிக்கள் புலம்புகின்றனர்.