Asianet News TamilAsianet News Tamil

சும்மா ஜிவ்வுனு உயர்ந்த திமுக வருமானம்… குறைந்து போன அதிமுக வருவாய் !!

கடந்த ஆண்டு பிராந்திய கட்சியான திமுகவின் வருமானம் 35.74 கோடி ரூபாய் என அந்தக்கட்சி தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதிமுகவின் வருமானம் அதைவிட குறைந்து போனது.

dmk income hike
Author
Chennai, First Published Mar 9, 2019, 8:21 AM IST

இந்தியாவைப் பொறுத்தவரை அங்கீகாரம் அளிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் பல்வேறு சலுகை களுள் வருமான வரி விலக்கும் ஒன்று.வரி விலக்கு பெறுவதற்கு ஒவ்வொரு கட்சியும் ஆண்டு தோறும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு வருமான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

கட்சி தலைவரோ-பொருளாளரோ 'எங்க கட்சி வருமானம் இவ்வளவு தான்''என்று சும்மா சொல்லிவிட முடியாது. கட்சிக்கான வருவாய் வந்த வழிகளை தெளிவாக குறிப்பிட்டு-அதனை முறையாக தணிக்கை  செய்து உரிய ஆவணங்களோடு அனுப்ப வேண்டும்.அப்போது தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும்.

dmk income hike

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய அரசியல் கட்சிகளில் 37 கட்சிகள்-2017-18 ஆம் ஆண்டில் தங்களது வருமானம் எவ்வளவு என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி உள்ளன.

இதனை 'ஜனநாயக புனரமைப்புகான அமைப்பு' (ஏ.டி.ஆர்) அண்மையில் வெளியிட்டது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள பிராந்திய கட்சிகளின் வருமானம் தெரிய வந்துள்ளது. தேசிய அளவில் அதிக வருமானம் உள்ள கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி உள்ளது. 

dmk income hike

கடந்த (2017-18) ஆண்டு அதன் வருமானம்-47.19 கோடி ரூபாய். அதற்கு அடுத்த இடம்-தி.மு.க.வுக்கு. இந்த கட்சியின் வருமானம் 35.74 கோடி ரூபாய்.இதற்கு முந்தைய ஆண்டில் தி.மு.க.வருமானம் வெறும் 3 கோடியே 78 லட்சம் ரூபாய் தான்.இவ்வளவு வருவாய் வந்ததிற்கான காரணத்தையும் திமுக தெரிவித்துள்ளது.

dmk income hike

அதில் கடந்த ஆண்டு நாங்கள் உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்தினோம். ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளோர் -நிலுவைத்தொகையுடன் செலுத்திய பணம்- புதிய உறுப்பினர் அட்டை பெறுவதற்கு செலுத்திய பணம் மற்றும் புதிதாக கட்சியில் இணைந்தோர் உறுப்பினர் கார்டு பெறுவதற்காக கொடுத்த பணம்- என மொத்தம் 22 கோடி வசூலானது என திமுக தெரிவித்துள்ளது.

dmk income hike

இது தவிர கட்சி பெயரில் வங்கிகளில் இருப்பில் உள்ள 'டெபாசிட்' தொகைக்கான வட்டியாக 11.77 கோடி ரூபாய் வந்துள்ளது என திமுக தேர்தல் ஆணையத்திடம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios