குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் கொலைகாரர்களுக்குச்சமம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறியுள்ளார். 

சென்னை அடையாறில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் படத்தின் இசைவெளியீட்டு விழா வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அசாமில் நடக்கும் பிரச்சனையும், இலங்கைத் தமிழர் பிரச்சனையும் வெவ்வேறு. அரசியல் லாபத்திற்காகச் சிலர் அதற்கு முடிச்சு போடுகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வதந்திகளை பரப்புவார்கள் கொலைகாரர்களுக்குச் சமம் என விமர்சித்தார்.

மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றன. வேண்டுமென்றே இந்து, இஸ்லாமியர்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் செயல்பட்டு வருகின்றனர். பேருந்து, ரயில்களை எரித்துதான் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகக் கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கருத்து தெரிவிக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது என்றார்.