மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சவுக்கு சங்கர்... கைது செய்யக்கோரி திமுகவினர் புகார்!!

மகளிர் உதவித்தொகை அறிவிப்பு குறித்து டிவிட்டரில் அவதூறாக பதிவு செய்ததாக கூறி சவுக்கு சங்கரை கைது செய்ய கோரி திமுகவின் மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

dmk has filed a complaint demanding the arrest of savukku shankar for controversial twitter post

மகளிர் உதவித்தொகை அறிவிப்பு குறித்து டிவிட்டரில் அவதூறாக பதிவு செய்ததாக கூறி சவுக்கு சங்கரை கைது செய்ய கோரி திமுகவின் மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதில், மகளிர் உரிமைத்தொகை தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேளாண்துறை வளர்ச்சிக்கு ஊக்கம் தரும் பட்ஜெட்... வைகோ வரவேற்பு!!

மேலும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த திட்டம் செப்.15 ஆம் தேதி அண்ணா பிரந்த நாள் முதல் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு மட்டுமே மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த அறிவிப்பை விமர்சிக்கும் வகையில் சவுக்கு சங்கர் டிவிட்டரில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

இதையும் படிங்க: விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என திமுக பதில் அளிக்குமா? அண்ணாமலை கேள்வி!!

அதில் தகுதியான பெண்களை தேர்வு செய்வது இப்படிதான் என்கிற வகையில் திரைப்பட காட்சியை பகிர்ந்து விமர்சனம் செய்திருந்தார். இதை அடுத்து மகளிருக்கான 1000 ரூபாய் உரிமை தொகை குறித்து டிவிட்டரில் அவதூறாக பதிவு செய்ததாக குற்றஞ்சாட்டி, சவுக்கு சங்கரை கைது செய்ய கோரியும், அவரது டுவிட்டர் கணக்கை முடக்க கோரியும் உசிலம்பட்டியில் திமுகவின் மதுரை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios